என்னால் எவ்வளவு ப்ரீமியம் கட்ட முடியுமோ அதுக்கு ஏத்தா மாதிரி பாலிசி சொல்றேன்னு அந்த ஏஜெண்ட் சொன்னதும் நான் முடிவு பண்ணிட்டேன் என்ன பண்ணப் போறேன்னு… நைஜீரியாகாரன் இமெயில் பத்தித் தெரிஞ்சி இருந்தாலும் சும்மா அவனோடு விளையாடிப் பாப்போம் இல்லையா அது மாதிரி இந்த ஏஜெண்ட் என்னதான் சொல்றார்னு பாக்கலாம்னு தொடர்ந்தேன்..
என்ன சார் இப்படிச் சொல்றீங்க, நம்ம ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு இன்சூரன்ஸ் Ideal, 10 மடங்கு Mandatory ன்னு சொல்றாங்களேன்னு கேட்டேன், அசராம அடிச்சார் மனுசன் – அதெல்லாம் அமெரிக்காகாரங்க சொல்றது சார் நம்மூருக்கு ஒத்து வராதுன்னார். அமெரிக்காவில் 10 வருசம் வேலை செஞ்சு சோசியல் செக்யூரிட்டிக்கு பணம் கட்டியிருந்தா ரிட்டையர்மெண்ட் வயசுக்கப்புறம் சோசியல் செக்யூரிட்டி பணம் பென்சன் மாதிரி கொஞ்சமாச்சும் வரும். அம்மாதிரி எதுவும் இல்லாத இந்திய தனியார் துறை எம்ப்ளாயீஸ் அதிகமா இல்ல இன்சூரன்ஸ் எடுக்கணும், கம்மியா எடுக்கணும்னு சொல்றீங்களேன்னு கேட்டேன்
சரி சார் உங்களுக்கு ஏத்தா மாதிரியே நல்லா பண்ணித் தந்துடலாம், இப்ப ரெண்டு பாலிசி சொல்றேன் சார் ரெண்டுமே ரொம்ப நல்ல பாலிசிகள், செம பாப்புலர் – ஒண்ணு Money Back Policy ரெண்டாவது Endowment plus என்கிற பாலிசி, ரெண்டுமே IT ல வேலை செய்யற உங்களை மாதிரி ஆளுங்க மத்தியில் ரொம்ப ஃபேமஸ்.
செம ரிட்டர்ன்ஸ், இன்கம்டாக்ஸ் பெனிஃபிட் அதோட ஆயுள் காப்பீடு- ஒரே கல்லுல மூணு மாங்கா. இந்த மணி பேக் பாலிசி 20 வருசம் டெர்ம். 5,10,15 வருட முடிவில் பாலிசி அமவுண்ட்டில் 20% கிடைக்கும், 20 வருச முடிவில் மிச்ச 40 % மற்றும் போனஸ் கிடைக்கும். Endowment plus இது ULIP ன்னு சொல்லுவாங்க.. இதுல நீங்க 20 வருசம் பணம் போட்டீங்கன்னா முடிவுல லம்ப்பா கிடைக்கும். நீங்க போடற பணம் 4% வளந்தா எவ்வளவு 10 % வளந்தா எவ்வளவுன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் இருக்கு பாக்கறீங்களான்னு கேட்டார் – வேணாங்க ஸ்டேட்மெண்ட்டெல்லாம் இருக்கட்டும். நாலும் வேணாம் பத்தும் வேணாம் நடுவால 7% கண்டிப்பா கிடைக்கும் காரண்டி கிடைக்குமான்னு கேட்டேன் – நம்ம வாழ்க்கைக்கே காரண்டி இல்லாத உலகத்தில் மார்க்கெட்டில் போடற்துக்கு எப்படி சார் கேரண்டி கிடைக்கும்னார். ஆனா சார்ட்ல இருக்கறத விட அதிகமாவே கிடைக்கும்.
வாழ்க்கைக்கு காரண்டி இல்லேன்னுதான் ஆயுள் காப்பீடு எடுக்க உங்களைக் கூப்பிட்டேன், நீங்க என்னடான்னா முதலீடு பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்க. நீங்க சொன்னீங்களே வருமான வரி விலக்கு அது ஒரு Myth. Section 80 c படி ரூ 1,50,000 வரை தான் விலக்கு பெற முடியும். இதில் PF, House loan interest, Insurance premium, ELSS என்ற நீண்ட கால முதலீடு எல்லாமே அடக்கம். நெறய பேருக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் இல்லாமலே இந்த லிமிட் வந்துடும், இதனால எனக்கு ஒரு பிரயோசனமும் இல்லை
அப்புறம் நீங்க சொன்ன ரெண்டு பாலிசிலேயும், பணம் திரும்ப கிடைக்கும்ங்கறீங்களே அது ஏன்? என்று கேட்டேன், என்ன சார் இப்படி கேக்கறீங்க, நீங்க போட்ட பணம் அப்ரிசியேட் ஆகி உங்களுக்கு திரும்ப வேணாமா? உங்களுக்கு வேணாம்னா நான் எடுத்துக்கறேன் சார் என்று உலகமகா ஜோக் சொல்ல்ட்டா மாதிரி சிரிச்சார். கார் இன்சூரன்ஸ் செலுத்தறோம் ஆக்சிடெண்ட் ஆகலேன்னா பணம் திரும்பக் கிடைப்பதில்லை, வீட்டுக்கு இன்சூரன்ஸ் வச்சிருக்கோம், தீ விபத்து ஆகலேன்னா பணம் திரும்பக் கிடைப்பதில்லை – ஆயுள் காப்பிட்டில் மட்டும் மனுசன் சாகலேன்னா ஏன் பணம் திரும்பக் கிடைக்கணும். கவரேஜும் தந்து வட்டியும் தர்ற்துக்கு கார்ப்பரேசன் முட்டாள் இல்லை. கார்ப்பரேசன் தரும் சில்லறைக்கு கஸ்டமர்களாகிய நாங்க கொடுக்கும் விலை ரொம்ப அதிகம் என்றேன்.
கார்ப்பரேசன் தரும் பணம் கம்மின்னு எப்படி சொல்றீங்கன்னு கேட்டார். அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால எனக்கு மூணு ப்ரீமியம் சொல்லுங்க –
ஒரு கோடி ரூபாய்க்கு மணி பேக் பாலிசிக்கு எவ்வளவு ப்ரீமியம்,
என்னால் ஆண்டுக்கு 1,20,000 சேமிக்க முடியும் இந்த அமவுண்டுக்கு எவ்வளவு கவரேஜ் மணி பேக் பாலிசி தரும்,
ஒரு கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி (செத்தா நாமினிக்கு காசு, சாகலேன்னா காசு திரும்ப வராது பாலிசி) 20 வருசம் டெனூர் இதுக்கு எவ்வளவு ப்ரீமியம்னு சொல்லுங்கன்னு கேட்டேன்
1. 40 வயசு, ஒரு கோடி பாலிசி, 20 வருசம் மணி பேக் – வருட ப்ரீமியம் 8,10,312 ரூபாய்
2. 40 வயசு, 20 ஆண்டு பாலிசி, வருசத்துக்கு 12,621 ப்ரீமியம், இதுக்கு 1,50,000 ரூ கவரேஜ்
3. 40 வயசு, 20 ஆண்டு காலம், 1 கோடி ரூவா டெர்ம் பாலிசி – 30,200 ரூ ஆண்டு ப்ரீமியம்
இதைச் சொல்வதில் அவருக்கு பெரிய தயக்கம், இருந்தாலும் சொன்னார். அஞ்சு நிமிசம் கொடுங்கன்னு கேட்டுட்டு மைக்ரோசாஃப்ட் எக்சலில் கீழே இருக்கும் கணக்கு போட்டுக் காமிச்சேன்.
LIC Moneyback Eterm Investment SIP
Age 40 40
Tenure 20 20
Amount 1Crore 1Crore
Premium 810312 34200 -776112
Year 5 2000000 -64676
6 2200000 10%
7 2420000 240
8 2662000 $49,522,213.33
9 2928200
10 3221020
Pay 2 2000000
Total 5221020
11 5743122
12 6317434.2
3 6949177.62
14 7644095.38
15 8408504.92
Pay 3 2000000
10408504.9
16 11449355.4
17 12594291
18 13853720
19 15239092.1
20 16763001.3
Final 5000000
21763001.3
புரியலயே சார் என்றார். I am not surprised என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.
பணம் திரும்பக் கிடைக்கும் பாலிசி வேண்டாம்னு சொன்னதுக்கு காரணங்களும் கால்குலேசன்களும் சொல்றேன் கேளுங்க
1. என்னோட முதன்மைத் தேவை ஆயுள் காப்பீடு அதையே நீங்க சொல்ற பாலிகள் தீர்க்காது. பத்து லச்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவவர் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்க்கு மேல இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்த முடியாது, அந்த காசுக்கு மணி பேக் தருவதோ 1,50,000 ரூ கவரேஜ். பிரயோசனமே இல்லை. ஒரு வேளை நான் அடுத்த வருடம் இறந்தால் என் குடும்பத்துக்கு கிடைக்கப் போவது 1.5 லட்சம் மட்டுமே. அதை வச்சிக்கிட்டு அவங்க எப்படி வாழ முடியும்?
2. ஆண்டு வருமானத்தின் பத்து மடங்கு ஆயுள் காப்பீடு அவசியம், அந்த அளவுக்கு எடுக்க மணி பேக் பாலிசிக்கு வருமானத்தில் 80% ப்ரீமியமா கட்டணும் – இது சாத்தியமே அல்ல
3. என் வருமானத்தின் 10 மடங்கு ஆயுள் காப்பீடுக்கு டெர்ம் பாலிசி எடுத்தா செலவு வெறும் 2500 ரூபாய் மட்டுமே (மாசத்துக்கு). என்னால் 10,000 ரூ மாசத்துக்கு சேமிக்க முடியும். 2500 ஐ இன்சூரன்ஸ்க்கு கொடுத்து விட்டு மிச்சத்தை SIP (Systematic investment plan) Mutual Fund இல் போட்டு வந்தால், Assuming 10% returns, 20 ஆண்டு கால முடிவில் என்னிடம் 56 லட்ச ரூபாய் இருக்கும்
4. ஒரு கோடி ரூபாய் ஆயுள் காப்பிட்டுக்கு ஒரு கம்பேரிசன் போட்டேன். அந்த அளவுக்கு மணி பேக் பாலிசி எடுக்க ஆண்டுக்கு 8,10312 ரூபாய் கட்டணும். 5 வருசம் கழிச்சி 20 லட்சம் கிடைக்கும். அதை ம்யூச்சுவல் ஃபண்டில் போட்டு ஆண்டுக்கு 10 % அப்ரிசியேசன்னு வச்சிப்போம். 10 ஆண்டு முடிவில் அது 32, 21,020 ஆக இருக்கும், மீண்டும் கார்ப்பரேசன் ஒரு 20 லட்சம் கொடுக்கும். ஆக 10 ஆண்டு முடிவில் என்னிடம் 52,21,020 இருக்கும் – மீண்டும் அஞ்சு வருசம் 10% அப்ரிசியேசன், 10 ஆண்டு முடிவில் இன்னோரு 20 லட்சம் இப்படியே போனா 20 ஆண்டு முடிவில் என்னிடம் ரெண்டு கோடியே பதினேழு லட்சத்து அறுபத்து மூணு லட்ச ரூபாய் இருக்கும்
இதுக்கு பதிலா, ஆண்டுக்கு 31,200 கொடுத்து கோடி ரூபாய் டெர்ம் பாலிசி எடுக்கறேன். ஆக ப்ரீமியத்தில் வித்தியாசம் ஆண்டுக்கு 7,76,112. அதாவது மாசத்துக்கு 64,676 ரூபாய். இதை மாதாமாதம் ம்யூச்சுவல் ஃபண்டில் போடுவேன். அதே 10 % அப்ரிசியேன்னு வச்சா 20 ஆண்டு கால முடிவில் என்னிடம் இருப்பது 4 கோடியே 95 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்.
இப்ப புரியுதா நான் ஏன் மணி பேக் பாலிசி எடுப்பது முட்டாள்தனம் என்றும் டெர்ம் பாலிசி எடுப்பதே சரியானதுன்னும் நினைக்கிறேன் என்றேன்.
மியூச்சுவல் ஃபண்ட்ல போடறதெல்லாம் ரிஸ்க் சார், மொத்தமா ஊத்திக்க வாய்ப்பு இருக்கு என்றார். அப்படிங்களா? Bond Fund, Secure Fund, Balanced Fund and Growth Fund இதெல்லாம் என்ன தெரியுங்களா? நீங்க அதிநல்ல திட்டம்னு சொன்ன எண்டோமெண்ட் ப்ளஸ் பாலிசியில் போடப்படும் பணத்தை முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் – அப்ப இவையும் ஊத்திக்க வாய்ப்புண்டுதானே? என்றேன். இல்ல சார் நம்ம கார்ப்பரேசன் நல்லா இன்வெஸ்ட் பண்ணுவாங்க நஷ்டம் வராம பாத்துப்பாங்க என்றார். அப்படியா, அப்ப Fund Manager யாரு, அவரோட Track Record, Fund இன் பத்தாண்டு கால வரலாறு, எந்தெந்த கம்பெனிகளின் ஸ்டாக், என்னென்ன Bond வச்சிருக்காங்கன்னு எல்லா விவரங்களும் தாங்க பாத்துட்டு சொல்றேன். சார் நீங்க மார்க்கெட்ல பணம் போடற ஆள் போலருக்கு உங்களுக்கு ULIP சரியா வருமே சார், நான் என்ன சொல்லியிருப்பேனுதான் உங்களுக்குத்தெரியுமே?
இன்சூரன்ஸ் கம்பெனி தரும் ULIP திட்டத்தில் பணம் போடுவதற்கு பதிலா, வேறு நல்ல ம்யூச்சுவல் ஃபண்ட்களில் நேரடியா முதலீடு செய்வேன். நீங்க சொல்லும் திட்டத்தில்
1. Premium allocation charges: First Year: 7.5%, 2nd to 5th year: 5% and 6 year onward 3% of the premium paid.
2. Mortality Charges: Will Be duducted from NAV on monthly basis as per the age of the policy holder.
3. Policy administration charges: Will be deducated on first month of each policy year.
4. Fund Management Charges: .70% per annum
5. Switching of Funds: 4 switching free in a year there after Rs. 100 will be charged per switch/
6. Discontinuation charges: If policy is surrendered before the completion of the 5th year then policy holder will have to pay certain charges which will be deducted from NAV.
7. Lock in Period: This policy have the lock in period of 5 years.
அதாவது நான் ஆயிரம் ரூபா இன்வெஸ்ட் பண்ணா, allocation charge, Mortality Charge, Admin charges, Fund Management charge னு எல்லாத்தையும் உருவிட்டு மிச்சத்தைத்தான் முதலீட்டுக்கே அனுப்புவீங்க, அப்புறம் குறைந்த பட்சம் 5 வருசம் பணம் போடணும், முதலீட்டை நிறுத்தினா அதுக்கு பெனால்டி, ஆண்டுக்கு நாலு முறை மட்டுமே இலவ்சமா Fund Switch பண்ண முடியும்னு Restrictions வேற. இதுக்கு பதிலா Valuesearchonline.com / moneycontrol.com போன்ற தளங்கள் Five Star Rating கொடுத்திருக்கும் ஃபண்ட்களில் முதலீடு செய்து much better returns பெறலாம். Sorry I reject both your proposals என்று சொன்னேன்.
அப்ப என்ன பாலிசிதான் எடுப்பீங்க, டெர்ம் பாலிசிதான் வேணும்னா சொல்லுங்க சார் அதுவாவது போட்டுடறேன் என்று ஆறுதல் பரிசு தேடியவருக்குச் சொன்னேன் – மன்னிக்கணும் ஏஜெண்ட் சார் – உங்க கார்ப்பரேசன் வழங்கு ஒரு நல்ல டெர்ம் பாலிசியான ETerm policy ஐ ஆன்லைனில் மட்டுமே எடுக்க முடியும் (ஏஜெண்ட் மூலம் எடுக்க முடியாது) அதில் ஒரு கோடி ருபாய்க்கு பாலிசி ஒண்ணு இப்ப எடுக்கப் போறேன், அடுத்த ஓரிரு வருடங்களில் என் சம்பளம் உயர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமா இன்னும் எடுத்து ரெண்டு கோடி வரை கவரேஜ் கொண்டு வருவேன். இப்ப நீங்க கெளம்பலாம் என்று முடித்துக் கொண்டேன்.
நான் கற்றுக் கொண்டவை, உங்களுக்கு இவை உகந்ததாக நீங்க கருதினால் ஃபாலோ பண்ணுங்க, இல்லேன்னா வழக்கம் போல மணி பேக் பாலிசி வாங்கி வளமா வாழுங்க
• ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு லட்சியம் 10 மடங்கு நிச்சயம் வேண்டும்
• இந்த லெவல் கவரேஜ் வேணும்ணா டெர்ம் பாலிசி (அ) ப்யூர் லைஃப் எடுப்பதுதான் வழி
• Insurance – Investment ரெண்டும் வெவ்வேற, ரெண்டையும் ஒரே ப்ராடக்டில் தேடக்கூடாது
• Insurance உம் முக்கியம் Wealth Creation உம் முக்கியம், காப்பீட்டுக்கு இன்சூரன் கம்பெனியையும், ரிட்டையர்மெண்ட் ப்ளானுக்கு ம்யூச்சுவல் ஃபண்ட் அல்லது வேறு முதலீடுகளைத் தேடவும்