ஆயுள் காப்பீடு பாகம் 1

 I am a firm believer of Insurance and I strive to cover my life and other valuable possessions with appropriate level of insurance.

This is not intended to undermine the value of Life Insurance but it is merely an effort to find out the right choice among options.

The following is my personal opinion about Insurance, Insurance companies and some of the available policies. I am neither qualified nor intend to advice anyone on this matter. Consider your needs, current situation and consult a professional before buying any insurance / investment products.

நான் ஒரு சாமானியன், நீங்கள் தினமும் எட்டு அம்பது ட்ரைனைப் பிடிக்க ஓடும் போதோ அல்லது மாநகரப் பேருந்துக்கு நிக்கும் போதோ டார்க் பேண்ட் லைட் கலர் சட்டை போட்டுக் கொண்டு கழுத்தில் கம்பெனி பேட்ஜும் கையில் செல் போனுமாய் OMR செல்லும் கம்பெனி பேருந்து எப்ப வரும்னு வேளச்சேரியில் காத்து நிற்கும் சாமானியன். என் பேர் இக்கதைக்கு முக்கியமல்ல, அப்படி முக்கியம்னு நீங்க நினைச்சா, , ரமேஷ், சுரேஷ் இப்படி 70-80 களில் பிரபலாமியிருந்த என்ன பேர் வேணா வச்சிக்கலாம். நாப்பது வயசு சென்னை வாசி. வீட்டைக் கவனிக்கும் மனைவி, பள்ளி செல்லும் இரு சிறு பிள்ளைகள் கொண்ட ந்யூக்ளியர் ஃபேமிலி

ஒரு நல்ல ஐடி கம்பேனியில் வேலை, ஆண்டுக்கு பத்து லட்சம் வருமானம், ஒன்பது லட்சத்துக்கு மேல் செலவு என்று முதலுக்கு மோசமில்லா வாழ்வு.. நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது போன மாசம் வரைக்கும். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று தொடர்ந்த நண்பனின் மறைவு. நாளைக்கு எனக்கு இப்படி ஒரு திடீர் மரணம் ஏற்பட்டால் என் குடும்பம் என்னாகும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.. என் வருமானம் திடீரென்று நின்று போனால் மனைவியும் குழந்தைகளும் எப்படி வாழ்வாங்க? வீடுக்கடன் என்னாகும்? பசங்க படிப்பு? என்று வரிசையாய் கேள்விகள். இது நாள் வரை ஆயுள்காப்பீடு குறித்து கொஞ்சமும் கவலைப் படாமல் இருந்தது தவறோ? அல்ரெடி லேட்டான்னு தெரிஞ்சிக்க பக்கத்து வீட்டு சங்கரனை கேட்டேன்.

இன்னும் ஒரு பாலிசி கூட எடுக்கலையா? நான் குடும்பத்தில் உள்ள எல்லார் பேர்லயும் பாலிசி வச்சிருக்கேன்னு குண்டைப் போட்டார், இந்த விசயம் கிச்சன் கேபினட் வழியா இதுவரை நம்ம குடும்பத்துக்கு ஏன் வரலேன்னு யோசிக்கும் போதே, சங்கரன் தன் நண்பர் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஒருந்தருக்கு போனை போட்டு
வசமா ஒருத்தன் சிக்கியிருக்கான் சீக்கிரம் கிளம்பி வா ரேஞ்சுக்குப் பேசினார். நண்பரும் நாளை மாலை சூப்பர் பாலிசி தகவல்களோடு வர்றேன்னு சொன்னார். எனக்கோ குழப்பம், என் தேவைகள் குறித்து நான் ஏதும் சொல்லாத போது அவர் எப்படி எனக்கேத்த பாலிசி தகவல்களோடு வருவார் என்று. சரி வரட்டும் அதுக்குள்ள நாமும் கூகிள் உதவியோடு கொஞ்சம் அடிப்படைத் தகவல்கள் திரட்டி கேள்விகள் ரெடி பண்ணிக்கலாம் என்று ஒக்காந்தேன்

மறுநாள் மாலை வீட்டுக்கு வந்த அவர், குசல விசாரிப்புகளுக்குப் பின்னர் எப்படி சார் இத்தனை வருசமா இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காம இருந்தீங்கன்னு கேட்டார் – என்னமோ தோணலை என்பதை பதிலாகத் தந்தேன். விடுங்க சார் சரி பண்ணிடுவோம் – இப்பவே உங்களுக்கு, மேடத்துக்கு பசங்களுக்குன்னு நாலு பாலிசி போட்றுவோம் என்றார். அதைக் கேட்டு ஜெர்க் ஆன நான் ஹவுஸ் வைஃப்க்கும் பசங்களுக்கும் எதுக்குங்க இன்சூரன்ஸ் பாலிசி என்றேன். கேள்விக்கு பதில் சொல்லாம என்ன சார் இப்படி கேக்கறீங்க? எல்லாரும் மனைவி பேர்லயும் பசங்க பேர்லயும் பாலிசி எடுக்கறாங்க, இது ஒரு நல்ல முதலீடு அப்புறம் அவங்களை நீங்க ரொம்ப லவ் பண்றீங்கன்னு காட்றதுக்கும் இது ஒரு வாய்ப்புன்னு என் மனைவிக்கு கேக்கறா மாதிரி சொன்னார். At this point, I knew it is going to be a long evening for him. பாலிசி எடுத்து பாசத்தை நிரூபிக்கும் அவசியம் எனக்கில்லைன்னு சொல்லிட்டு, ஆயுள் காப்பீடு என்பதை எதுக்காக எடுக்கறோம் கேட்டேன்

வருமானம் ஈட்டும் ஒரு நபர் இறந்து விட்டால், அந்த வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு வருமான வழிவகைதான் இன்சூரன்ஸ் என்றார். அபாரம் சார் ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க, உங்களுக்கு நல்ல பயிற்சி மற்றும் அனுபவம் இருக்கு போல என்றேன். அதுக்கு அவரை சந்தோசப்பட விடாமல், முதலீடுன்னு சொன்னீங்களே? நீங்க Financial Advisor ஆகவும் இருக்கீங்களா? முதலீடு குறித்து அட்வைஸ் பண்ண ஏதாவது AMFI certification or Certified Financial Planner பண்ணியிருக்கீங்களான்னு கேட்டேன்.. அதெல்லாம் கேள்விப் பட்டது கூட இல்லை சார், நம்ம இன்சூரன்ஸ் கம்பெனியிலயே நெறய முதலீட்டு ஆப்சன்ஸ் இருக்கு வெளிய தேவையில்லைன்னு விட்டுட்டேன்னார்.

சரி அது கெடக்குது விடுங்க நம்ம கதைக்கு வருவோம். வருவாய் இழப்பீட்டை சரிகட்ட பாலிசி எடுக்கணும்னா வேலைக்குப் போகாத மனைவிக்கும் பள்ளியில் இருக்கும் பசங்களுக்கும் எதுக்கு பாலிசி எடுக்கணும்னு கேட்டேன்? மனுசன் அசராம ராகுல் காந்தி ரேஞ்சுக்கு Woman empowerment சார், அவங்க பேர்ல பாலிசி போட்டு அது மெச்சூர் ஆகும் போது அவங்க பேர்ல செக் வந்தா அவங்களுக்கு சந்தோசமா இருக்கும்ல அப்புறம் பசங்க காலேஜ் போகும் போது மெச்சூர் ஆகற மாதிரி பாலிசி போட்டா வசதியா இருக்கும்னார். இந்த இடத்தில் கொஞ்சம் பொறுமை இழந்தேன் – நீங்க இன்சூரன்ஸ் ப்ராடக்ட் விக்கறீங்களா இல்ல இன்வெஸ்ட்மெண்ட் ப்ராடகட் விக்கறீங்களா?

இன்சூரன்ஸ்னா, அதோட தாத்பர்யமே, Replacement of Income தான், ரிட்டையர் ஆனவங்க, வேலைக்குப் போகாதவங்க, சிறுவர்கள் இவங்களுக்கு எல்லாம் பாலிசி எடுப்பது is NOT A WISE DECISION and a waste of money. வேலைக்குப் போகாத மனைவியோ பள்ளி செல்லும் பிள்ளைகளோ இறக்க நேர்ந்தால் அக்குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏதுமில்லை. அவங்களுக்கு கண்டிப்பா இன்சூரன்ஸ் பாலிசி தேவையில்லை

இன்வெஸ்ட்மெண்ட்னு சொன்னிங்கன்னா Recurring Deposit in Bank, PF, PPF, Mutual Fund, செல்வமகள், தங்கமகன் இப்படி பல ஆப்சன்ஸ் இருக்கு – கண்டிப்பா இன்சூரன்ஸ் கம்பெனியில் கிடைக்கும் வட்டியை விட அதிகமா கிடைக்கும் பாதுகாப்பான முதலீடுகள் நிறைய இருக்கு. நாங்க கொடுக்கும் பணத்தில் mortality Charges, Admin Charges எல்லாம் போக மிச்சம்தான் முதலீட்டுக்கு போகுது. வருமானம் இல்லாதவங்களுக்கு ஆயுள் காப்பீடு அவசியமில்லை – எனவே மாதந்திர முதலீடு செய்ய பணத்தை வேற இடத்தில் போட்டா மொத்தமும் முதலீடு. எனவே வேற எதிலாவது போடுவதுதான் உசிதம். அதெல்லாம் நான் பாத்துக்கறேன்

நான் எவ்வளவு அமவுண்டுக்கு பாலிசி எடுக்கணும்னு கேட்டேன். நாலஞ்சு பாலிசி கனவு தகர்ந்த அவர் என் பேரிலாவது 2 பாலிசி போட்டுவிடணும்னு முடிவு பண்ணிட்டார். ரெண்டு பாலிசி சஜஸ்ட் பண்றேன் சார் – உங்களால எவ்வளவு ப்ரீயமியம் கட்ட முடியுமோ அதுக்கு ஏத்தா மாதிரி வொர்க் அவுட் பண்ணித் தர்றேன்னு சொன்னார். At this point, I really decided what I am going to at the end. Even you may want to know that now but you will have to wait a bit

தொடரும்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *