பொதுவா மியூச்சுவல் ஃபண்ட், நேரடி பங்குச் சந்தை முதலீடு குறித்து காப்பீட்டு முகவர்கள் சொல்வது, அதெல்லாம் ரிஸ்க், அதெல்லாம் சூதாட்டம் மாதிரி, அதில் பணம் போட்டா முதலுக்கே மோசம் ஆகிடும், எனவே காப்பீட்டு பாலிசிகளில் முதலீடு செய்யுங்க, ரிட்டர்ன் கேரண்டீட் என்பதாக இருக்கும்.
அவர்களை எதிர்கொள்ள பயனர்களுக்கு இந்த படம் மிக உபயோகமா இருக்கும். இப்படம் பல விசயங்களைச் சொன்னாலும், இரண்டு விசயங்கள் மிக முக்கியமானவை
- எல் ஐ சி நிறுவனம் காப்பீட்டு முகவர்களால் சூதாட்டம் என்று சொல்லப்படும் பங்குச் சந்தையில்தான் பெருமளவு பணத்தை முதலீடு செய்கிறது. சென்ற ஆண்டு (2018-2019) எல் ஐ சி நிறுவனத்தின் முதலீடுகள் பெற்ற லாபம் மட்டும் 29,956 கோடிகள், முந்தைய ஆண்டு இத்தொகை 28,527 கோடியாக இருந்தது. இது வருமானமோ முதலீடோ அல்ல நண்பர்களே, எல் ஐ சி முதலீடு செய்து வைத்திருக்கு 4 லடச்ம் கோடிகள் அளித்த வருமானம் மட்டுமே. எல் ஐ சி நிறைய அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தாலும், அது ஈட்டிய வருமானத்தின் பெரும் பங்கு பங்குச் சந்தை வர்த்தகத்திலிருந்தே வந்துள்ளது
- வங்கிகள் வாராக்கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன, வங்கிகளில் வைக்கும் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை, காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்ப்படும் “முதலீடு” மட்டும் பாதுகாப்பானது என்றும் கூறப்படுவதைக் கேட்டிருக்கிறேன். எல் ஐ சி நிறுவனமும் அரசுக்கு மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களுக்கும் கடன் தருகிறது அது மட்டுமல்ல எல் ஐ சிக்கும் வாராக்கடன் பிரச்சனை இருக்கிறது. எல் ஐ சி தந்திருக்கும் கடனில் 6%க்கும் மேல் வாராக்கடன் என்று சொல்கிறது இச்செய்தி
இனியாவது உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்
எல் ஐ சி உங்களிடமிருந்து பெறும் பணத்தை பங்குச்சந்தை + அரசு கடன்பத்திரங்கள் கொண்ட Diversified Portfolio வில் சம்பாதிப்பதில் கொஞ்சூண்டு கிள்ளி உங்களுக்கு போனஸாக வழங்குகிறது. அதுதான் அனைவரும் சொல்லும் கோரண்டீட் ரிட்டர்ன்
எல் ஐ சி தரும் போனஸ் கேரண்டீட் எல்லாம் இல்லை. 90% பேர் எண்டோமெண்ட் பாலிசி எடுக்கும் வரை, தண்டத்துக்கு எல் ஐ சிக்கு கோடி கோடியா கொட்டும் வரை, அதை எல் ஐ சி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கோடி கோடியா லாபம் பாக்கும் வரை போனஸும் இதே அளவில் இருக்கும். குறைந்தால் போனஸும் குறையத்தான் செய்யும்
எல் ஐ சியும் வாராக்கடன், மத்திய அரசு பல நிறுவனங்களை அதன் தலையில் கட்டுவது உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு எல் ஐ சியைப் பிடிக்கும், நான் அனைவருக்கும் சொல்வது ப்ரீமியம் அதிகம் செலுத்த முடிந்தால் டெர்ம் பாலிசியை எல் ஐ சியில் எடுக்கவும், ப்ரீமியம் ரொம்ப அதிகம் என்று நினைத்தால் ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்தில் எடுக்கவும்தான். அதற்குக் காரணம் எல் ஐ சியின் பொருளாதார வலிமை. என் கருத்தில் உலகிலேயே மிக வலிமையான காப்பீட்டு நிறுவனம் எல் ஐ சி. பிரச்சனை நிறுவனம் அல்ல, எண்டோமெண்ட் பாலிசிகள் “முதலீடு” என்று நினைத்து பணத்தை வீணடிப்பதுதான். ஆயுள் காப்பீட்டுக்கு எல் ஐ சியின் இடெர்ம் பாலிசி மற்றும் ஓய்வூதியத்துக்கு எல் ஐ சியின் ஜீவன் அக்ஷய் மற்றும் ஜீவன் சாந்தி இவை மட்டுமே என் சாய்ஸ்கள்
நம் உடல் உறுப்புகள் ஒரு நாள் ஒத்துழைக்காமல் போகும். நம் உடம்பே ஒரு நாள் நமக்கு பாரமாகிப் போய்விடும். நம் முன்னால் நிற்பரே நமக்கு அடையாளம் தெரியாமல் போகக்கூடிய நாளும் வரக்கூடும். நாம் சேர்த்த எதுவும் நமக்கு சொந்தமாகாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால் தன்னலம் இல்லாம் எழுத்து வடிவில் நாம் பலருக்கும் கொண்டு சேர்த்தவைகள் மட்டும் நம் பேரன்களுக்கு பேரன் வாழும் போதும் கூட நம் பெயரை எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் மூலம் உச்சரிக்க வைத்துக் கொண்டு இருக்கும்.
சமூகத்திற்கு திருப்பி அளித்துக் கொண்டு இருக்கும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள். நன்றியும் அன்பும்.
Mutual funds இல் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணி கோடி கோடியாய் சம்பாதித்த சாமானியர்கள் எத்தனை பேர் என்பதையும் , வாழ்க்கையை இழந்தவர்கள் எதனை பேர் என்பதையும், guranteed return உண்டா என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ரிட்டர்ன்ஸுக்கு உத்தரவாதம் கிடையாது என்று எல்லாருக்கும் தெரியும், யாரும் கேரண்டீட் ரிட்டர்ன் என்று சொல்லி விற்பது கிடையாது எல் ஐ சி பாலிசி மாதிரி. இங்கு பேசுறது மியூச்சுவல் ஃபண்ட் பத்தியில்லை – எம் எஃப் பத்தி நிறைய எழுதியிருக்கேன், விருப்பம் இருந்தா படிங்க, இங்க பேசுறது காப்பீட்டு முகவர்கள் சொல்லும் பொய்களைப் பத்திதான், மறுப்பு இருந்தால் சொல்லுங்க பேசலாம்