தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தமிழகமும் தங்க முதலீடும் பிரிக்கமுடியாதவை. தமிழர்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீது தனிக்காதல் உண்டு. நகைகளாக வாங்கி அணிந்து கொண்டு அதுவே  முதலீடாகவும் கருதப்படுகிறது. இந்நிலை மாறி தங்க முதலீட்டுக்கு மாற்று வழிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பரவி வருகின்றன. அதென்ன மாற்று வழிகள்? அவற்றுக்கும் நகைகளுக்கும் என்ன வித்தியாசம்? இது குறித்த ஓர் அலசல்

உலகில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் போல தங்கத்தின் விலையும் அதன் உற்பத்தி & தேவையைப் பொருத்து அமையும் (Supply Vs Demand), கையிருப்பு  குறைந்தும் நுகர்வோரின் தேவை அதிகமாகவும் இருந்தால் விலை அதிகரிக்கும், அவை மாறி இருக்கும் போது விலை குறையும்.

தங்கம் விலை எப்போது ஏறும்? சர்வதேச பங்குச் சந்தைக் குறியீடுகள் வீழும் போது முதலீடுகள் தங்கத்தை நோக்கிச் செல்லும். அபோது தங்கத்தின் விலை ஏறும். பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது பொதுவாக தங்கத்தின் விலை குறையும் அல்லது பெரிய மாற்றமில்லாமல் இருக்கும். கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததிலிருந்து அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் Volatile ஆக இருப்பதால் தங்கத்தின் விலை ஏறியுள்ளது. ஐந்தாண்களுக்கு முன் (ஜூலை 2018) 1175$ க்கு விற்ற ஒரு ட்ராய் அவுன்ஸ் (32 கிராம்) தங்கம் இன்று (மார்ச் 2023) 1975$ க்கு விற்கிறது. அதாவது ஐந்தாண்டுகளில் 70% வளர்ச்சி

தங்கத்தின் விலை இந்தியாவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை, சர்வதேச விலை, அதுவும் $ இல் நிர்ணயிக்கப்படுது. ஆயில் விலை சர்வதேச சந்தையில் குறையுதுன்னு வைங்க, அதே நேரம் $ மதிப்பு ஏறுது, அப்ப இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறுமா இல்லையா அது போன்ற ஒரு விலை ஏற்றம் தான்

அதன் விலையை நிர்ணயக்கும். தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டை, தங்க விலை, டாலர் மதிப்பு ரெண்டுமே பாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.

ஒரு நல்ல போர்ட்ஃபோலியோவில் 5 முதல் 10% வரை தங்கம், வெள்ளி போன்ற Precisous Metals இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.

தங்கத்தில் முதிலீடு செய்ய இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளும் அவற்றின் சாதக பாதங்கங்களும்

  1. தங்க நகைகள்

எங்கு வாங்கலாம்? : நகைக்கடைகளிலும் வங்கிகளிலும் நகைகளாகவோ தங்கக் கட்டிகளாகவோ வாங்கலாம்

குறைந்தபட்ச முதலீடு : ஒரு கிராமில் ஆரம்பித்து எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்

வட்டி அல்லது வருமானம் : தங்க நகை / கட்டிகள் வருமானம் ஏதும் தரா

வரி : தங்க நகைகளுக்கு 3% ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது

செலவு : வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜி எஸ் டி செலுத்த வேண்டும், விற்கும் போதும் தேய்மானம் என பல்முனை செலவுகள் உண்டு

வரி விதிப்பு : குறுகியகால மூலதன ஆதாயம் (Short Term Capital Gain) யின் உங்க வருமானவரிப்படி, நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital Gain)  20%

எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் : அப்படி ஒரு கட்டாயமில்லை, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும்.

சாதகம் : உடனடியாக விற்க முடியும், நகையாக வாங்கினால் அணிந்து உபயோகப்படுத்த முடியும்

பாதகம் : தொலைக்கும் / திருட்டு கொடுக்கும் அபாயம் உண்டு. பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்க தனியாக செலவு செய்ய வேண்டும். தங்கம் தரும் வளர்ச்சியில் பெரும்பகுதி செய்கூலி சேதாரம் ஜி எஸ் டி யில் போய்விடும்

  • மத்திய அரசின் கடன் பத்திரங்கள் (Sovereign Gold Bonds)

எங்கு வாங்கலாம் : வங்கிகளிலும் பங்குச் சந்தையிலும் வாங்கலாம்.

எவ்வளவு வாங்கலாம் : குறைந்தபட்சம் 1 கிராம், அதிகபட்சமாக தனிநபர் ஒருவர் 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம்

வட்டி அல்லது வருமானம் : முதலீட்டின் 2.5% ஆண்டு வட்டியாக வழங்கப்படுகிறது

வருமான வரி : 2.5% ஆண்டு வட்டிக்கு வருமானவரி உண்டு. திட்ட காலம் முழுமையும் காத்திருந்தால் நீண்டகால முதலீட்டு ஆதாய வரி கிடையாது

ஜி எஸ்டி : இதில் செய்யும் முதலீட்டுக்கு ஜி எஸ் டி கிடையாது

செலவு : இதற்கென தனியாகச் செலவு கிடையாது. டிமேட் கணக்கில் பத்திரங்கள் வரவு வைக்கப்படும். வேறு பங்கு சார் முதலீடுகள் இல்லாதவர்கள் இதற்கென தனியாக டிமேட் கணக்கு துவங்கினால் அதற்கு சிறு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் : திட்டத்தின் காலம் 8 ஆண்டுகள். ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும் வாய்ப்பு வழங்கப்படும்

சாதகம் : பாதுகாப்பானது, தங்கத்தின் வளர்ச்சி தவிர ஆண்டு வட்டியும் உண்டு. நீண்டகால முதலீட்டு ஆதாய வரி கிடையாது.

பாதகம் : 8 ஆண்டுகள் காத்திருப்புக்காலம்

  • Gold ETF (Equity Traded Funds)

எங்கு வாங்கலாம்? : பங்குச் சந்தையில் வாங்கலாம். முதலீடு டீமேட் கணக்கில் யூனிட்களாக வரவு வைக்கப்படும்

குறைந்தபட்ச முதலீடு : ஒரு கிராமில் ஆரம்பித்து எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்

வட்டி அல்லது வருமானம் : முதலீட்டுக்கு வட்டி ஏதும் கிடையாது

       ஜி எஸ் டி  : Gold ETF இல் செய்யும் முதலீட்டுக்கு ஜி எஸ் டி கிடையாது

      கட்டணம் : திட்டங்களின் கட்டணம் சுமார்  1%

           வரி விதிப்பு : குறுகியகால மூலதன ஆதாயம் (Short Term Capital Gain) யின் உங்க               வருமானவரிப்படி, நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital Gain)  20%

எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் : அப்படி ஒரு கட்டாயமில்லை, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும்.

சாதகம் : பாதுகாப்பானது. நிறுவனங்களின் பங்குகளை விற்பது மாதிரி இதையும் பங்குச் சந்தையில் உடனடியாக விற்க முடியும்.

பாதகம் : மத்திய அரசின் கடன் பத்திரம் போல் இதில் ஆண்டு வட்டி கிடையாது. திட்டத்துக்கு சுமார் 1% கட்டணம் செலுத்த வேண்டும்

  • தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

எங்கு வாங்கலாம்? : மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் தளத்தில் கணக்கு துவங்கி முதலீடு செய்யலாம். டீமேட் கணக்கு அவசியமில்லை

 குறைந்தபட்ச முதலீடு : முதல் முறை 5000 ரூபாய் முதலீடு செய்தபின்னர் 100 ரூ கூட முதலீடு செய்யலாம். மாதா மாதம் தொடர் முதலீடு செய்ய குறைந்தபட்சத் தொகை 1000 ரூபாய்

வட்டி அல்லது வருமானம் : முதலீட்டுக்கு வட்டி ஏதும் கிடையாது

   ஜி எஸ் டி  : Gold மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யும் முதலீட்டுக்கு ஜி எஸ் டி கிடையாது

      கட்டணம் : திட்டங்களின் கட்டணம் சுமார்  1%

           வரி விதிப்பு : குறுகியகால மூலதன ஆதாயம் (Short Term Capital Gain) யின் உங்க               வருமானவரிப்படி, நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital Gain)  20%

எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் : அப்படி ஒரு கட்டாயமில்லை, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும்.

சாதகம் : பாதுகாப்பானது. எப்போது வேண்டுமானாலும் நிதி நிறுவனங்களிடம் திருப்பிக் கொடுத்து பணம் பெறலாம். டீமேட் கணக்கு அவசியமில்லை

பாதகம் : மத்திய அரசின் கடன் பத்திரம் போல் இதில் ஆண்டு வட்டி கிடையாது. திட்டத்துக்கு சுமார் 1% கட்டணம் செலுத்த வேண்டும்

மேலே உள்ள வாய்ப்புகளில் உங்களுக்குப் பொருத்தமான வழியைத் தேர்ந்தெடுத்து தங்கத்தில் முதலீடு செய்து பலன் பெருங்கள்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *