HDFC Life இன் Sanchay Plus ஒரு பார்வை

HDFC Life தற்போது ப்ரமோட் செய்யும் கேரண்டீட் இன்கம் ப்ளான் Sanchay Plus.

ஏற்கெனவே சஞ்சய் இருந்த போது அது குறித்து எழுதியிருக்கிறேன். இம்முறை சென்னை விஜயத்தில் சஞ்சய் ப்ளஸ் குறித்து வங்கியில் நச்சரித்ததால் ப்ளஸ்

இதில் 4 தெரிவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  1. Guaranteed Maturity  10 வருடங்கள் பணம் கட்டினால் 20ம் ஆண்டு முடிவில் மொத்தத் தொகை கிடைக்கும்
  2. Guaranteed Income  12 ஆண்டுகள் பணம் கட்டினால், ஒராண்டு கழித்து 14ம் ஆண்டு முதல்  25ம் ஆண்டு வரை (12 ஆண்டுகள்) ஆண்டுக்கொருமுறை பணம் கிடைக்கும்
  3. Long Term Income : 10 ஆண்டுகள் பணம் கட்டினால், ஒராண்டு கழித்து 12ம் ஆண்டு முதல்  36ம் ஆண்டு வரை (25 ஆண்டுகள்) ஆண்டுக்கொருமுறை பணம் கிடைக்கும். 36ம் ஆண்டு ஒரு LumpSum முதிர்வுத் தொகையும் கிடைக்கும்
  4. Life Long Income  10 ஆண்டுகள் பணம் கட்டினால், ஒராண்டு கழித்து 12ம் ஆண்டு முதல்  99 வயது வரை ஆண்டுக்கொருமுறை பணம் கிடைக்கும். இறுதியில் ஒரு LumpSum முதிர்வுத் தொகையும் கிடைக்கும்

HDFC Life இன் இணைய தளத்தில் உள்ள உதாரணத்தையே கணக்குக்கு எடுத்துக் கொண்டேன்.

30 வயதாகும் ஒரு ஆண் திட்டத்தில் சேருகிறார். ஆண்டு ப்ரீமியம் 1 லட்ச ரூபாய் மற்றும் வரிகள்.

  1. பத்தாண்டுகள் பணம் கட்டினால் அவருக்கு 20ம் ஆண்டு முடிவில் கிடைப்பது 2,206,300 ரூபாய்கள்
  2. 12 ஆண்டுகள் பணம் கட்டினால் 14ம் ஆண்டிலிருந்து 25ம் ஆண்டு வரை (12 ஆண்டுகள்) ஒவ்வொரு ஆண்டும் 2,09,000 ரூபாய்கள் கிடைக்கும்.

முதலாம் ஆண்டு கட்டும் 1 லட்ச ரூபாய் 5% அளவில் வளர்ந்தால், 20 ஆண்டுகள் முடிவில் கையிருப்பு 265,329 ரூபாய், 2ம் ஆண்டு கட்டும் 1லட்ச ரூபாய் 20 ம் ஆண்டு முடிவில் 252695 ரூபாய். இப்படியே 10 ஆண்டுகளும் கட்டும் பணம் 20 ஆண்டு முடிவில் 21,51,256 ஆக இருக்கும். இங்கு நான் வரிகளை கணக்கில் எடுக்கவில்லை. எடுத்தால் இத்தொகை எச் டி எஃப் சி தரும் 2,206,300 ரூபாயைத் தாண்டிவிடும்.

அதாவது HDFC Life இன் Sanchay Plus தருவது 5% வளர்ச்சி மட்டுமே. எச் டி எஃப் சி வங்கி தற்போது 10 ஆண்டு தொடர் வைப்பு நிதி (ரெக்கரிங் டெபாசிட்)க்கு 7% வட்டி வழங்குகிறது. இதே பணத்தை 12 மாதங்களாக்கி மாதம் 8333 ரூபாய் எச் டி எஃப் சியில் கட்டினால் 10 ஆண்டுகள் முடிவில் உங்க கையில் 14,42,373 ரூபாய்கள் இருக்கும். 10 ஆண்டுகள் கழித்து 7% வட்டி இருப்பது சந்தேகம். அடுத்த 10 ஆண்டுகள் 5% அளவில் வளர்ச்சி இருந்தாலும் இப்பணம் 23.5 லட்சமாக ஆகியிருக்கும்.

இரண்டாவது ஆப்சனுக்கும் இதே மாதிரி கணக்குப் போட்டுபார்த்தால் 12ம் ஆண்டு முடிவில் 24,69,269 ரூபாய் இருக்கும். அடுத்த ஆண்டு பணம் கிடைக்காது, அதுக்கு 5% வளர்ச்சி போட்டால் அது 25,92,732 ரூபாய் இருக்கும். எச் டி எஃப் சி தருவதோ ஆண்டுக்கு 209,000 வீதம் 12 ஆண்டுகள். இது முதல் தெரிவை விட மோசம்.

20 ஆண்டுகள் நீண்டகாலம் காத்திருந்து 5% வளர்ச்சி கூட பெறும் வழிதெரியாதவர்கள் தாராளமாக இத்திட்டத்தில் சேரலாம்.

விற்பனையாளர்கள் இத்திட்டத்தில் இருக்கும் வேறு இரண்டு பயன்கள் பற்றி சொல்வாங்க

  1. ஆயுள் காப்பீடு : மேலே சொன்ன உதாரணத்துக்கு 12.5 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் கட்டக்கூடிய 30 வயது உடையவருக்கு இக்காப்பீடு போதவே போதாது. 10 லட்ச ரூபாய் சம்பாதித்தால் தான் 1 லட்சம் இதில் முதலீடு செய்ய முடியும். அவருக்கு 1-2 கோடி ஆயுள் காப்பீடு தேவை, அதை டெர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்
  2. வரி விலக்கு : கட்டும் பணத்துக்கு 80 சியில் வரி விலக்கு உண்டு. 80சியின் உச்ச வரம்பே 1.5 லட்சம் தான். அதுக்கு இதிலேருந்து 1 லட்சம் போக வாய்ப்பு மிகக் குறைவு. வருமான வரி விலக்கு தேவைப்படுவோர் இ எல் எஸ் எஸ் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களை நாடுதல் நலம்

LIC Endowment நியூ ஜீவன் ஆனந்த் vs PPF vs Mutual fund

வணக்கம் நண்பர்களே. LIC என்பது காப்பீட்டு நிறுவனம். அதில் காப்பீடு செய்யவேண்டும், ஆனால் காப்பீட்டுடன் முதலீடு என ஒன்றாகச் செய்யக்கூடாது என்பது என் கருத்து. ஏன் காப்பீட்டில் முதலீடு செய்யக்கூடாதென்றால், காப்பீடும் பத்தாது, முதலீடும் தேறாது(கூட்டு வட்டி 4% முதல் 6% வரை). பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டால், பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் முதிர்வுத்தொகை மகிழ்ச்சியைத் தராது.
LICவில் முதலீட்டுடன் காப்பீட்டுக்கென பல திட்டங்களிருக்கின்றன. அதில் முதலாவதாக நாம் பார்க்கப்போவது Endowment வகையைச் சேர்ந்த நியூ ஜீவன் ஆனந்த்.  https://www.licindia.in/Products/Insurance-Plan/anand

LIC Endowment நியூ ஜீவன் ஆனந்த்

LICவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மாதிரி. https://www.licindia.in/Products/Insurance-Plan/anand/abi.aspx
பாலிசிதாரரின் வயது 30. காலம் – 35 ஆண்டுகள். உறுதிப்படுத்தப்பட்ட முதிர்வுத் தொகை (Sum Assured ) – ஒரு லட்சம்.பாலிசித்தொகை  – ஆண்டுக்கு 3,165.
முதலில் பொதுவாக LICயின் endowment திட்டத்தின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம். 

1. Insurance – நான் Endowment திட்டங்களின் காப்பீட்டைப் பற்றி விவாதிக்கப்போவதில்லை. ஏனென்றால் காப்பீட்டுத் தொகை மிகக்குறைவு. ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330 செலுத்தினாலே,ஒன்றல்ல இரண்டு லட்சம் காப்பீடு கிடைக்கும். அதிகத் தொகைக்கு TERM INSURANCE. Term Insuranceக்கு ஈடான காப்பீட்டை Endowmentடால் கொடுக்கவே முடியாது என்பதே நிதர்சனம்.
2. Vested Simple Reversionary Bonus – LIC ஒவ்வொரு ஆண்டும் அதன் முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் Bonus நிர்ணயிக்கும். இணைப்பு -> https://www.licindia.in/Customer-Services/Bonus-Information. மேற்கண்ட நம் மாதிரிக்கு 2018ல் கொடுக்கப்பட்ட Bonus தொகை, Sum Assuredன் ஆயிரத்துக்கு 49 ரூபாய். மொத்தம் 4,900.. அடேங்கப்பா நாம் போட்ட பணமே 3,165 தான், அதற்கு 4,900 போனசானு நினைக்குறீங்களா .? இந்த Bonusயை கண்ணால பார்க்கத்தான் முடியும். திட்ட முதிர்வுக்குப் பிறகு தான் கையில் கிடைக்கும் . மேலும் இந்த Bonusக்கு எந்த வட்டியும் கிடையாது. இது போல், நம் எடுத்துக்காட்டின் படி ஆண்டுக்கு ஒன்று என மொத்தம் 35 போனஸ் கிடைக்கும். எதிர்காலத்தில் LICன் முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தைப் பொறுத்து இதே போனஸ் கிடைக்கலாம் , அல்லது குறையலாம். LIC தளத்தின் மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்ட அதிகபட்ச போனஸ் தொகையே 32 ரூபாய் என்றாலும் 2018ல் தந்த 49 ரூபாயையே நம் தோராய கணக்கிற்குப் பயன்படுத்துகிறேன். 
முதிர்வின் பொழுது கிடைக்கும் போனஸ் -> 35 ஆண்டுகள் * 4,900 போனஸ்  = 1,71,500 ரூபாய். இதுதவிர LICயின் சாதனை, மையில் கல்லைப் பொறுத்து எப்பவாவது சிறப்பு போனஸ் தரப்படலாம். இது பெரிய அளவில் முதிர்வு தொகையை மாற்றாது என்பதால் கணக்கில் கொள்ளவில்லை .
3. Final Additional bonus – முதிர்வின் பொழுது ஒரு முறை வழங்கப்படும். 2012ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட போனஸ் தொகை Sum Assuredன் ஆயிரத்துக்கு 1,850 ரூபாய். இணைப்பு -> https://www.licindia.in/Customer-Services/Bonus-Information/Bonus__For_2011-12
முதிர்வின் பொழுது கிடைக்கும் Final Additional bonus -> (1,00,000/1000) * 1,850 போனஸ்  = 1,85,000 ரூபாய் 


2054 ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மொத்தத் தொகை  -> 1,00,000 உறுதிபடுத்தப்பட்ட முதிர்வுத் தொகை (Sum Assured ) +1,71,500  Vested Simple Reversionary Bonus(தோராயமாக) + 1,85,000 Final Additional bonus (தோராயமாக) = 4,56,500 ரூபாய்.கூட்டு வட்டியின் படி 6.78%. முப்பதைந்து ஆண்டு நீண்ட கால முதலீடு என்பதால் ஒரு சுமாரான 6.78% கூட்டு வட்டி கிடைத்திருக்கு.

PPF – Public Provident Fund

இதற்க்கு பதிலாக ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330யை காப்பீட்டுக்குச் செலுத்திவிட்டு மீதத் தொகையை மிகவும் பாதுகாப்பான PPFல் முதலீடு செய்திருந்தால் எதிர்பார்க்கப்படும் தொகை (தோராயமாக) ->  5,80,000.00 ரூபாய். ஏறக்குறைய ஒரு லட்சத்து முப்பதாயிரம் அதிகம். எப்படி LICன் 2018ம் ஆண்டு Bonus தொகையை அனைத்து ஆண்டுகளுக்கும் கணக்கில் கொண்டேனோ, அது போல PPFன் தற்போதைய 8% வட்டியையே கணக்கில் கொண்டுள்ளேன். LIC Bonus போல இதுவும் மாறலாம். மேலும் ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் தொகையும் எதிர்காலத்தில் கூடலாம். மத்திய அரசின் திட்டம் என்பதால் பெரிய அளவில் விலையேற்றமிருக்காது எனக் கருதி விலை உயர்வைக் கணக்கில் கொள்ளவில்லை.

Mutual fund – Aggressive Hybrid Fund

இதுவே கொஞ்சம் துணிவு எடுத்து ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் ஆண்டுக்கு 330 காப்பீட்டுக்குச் செலுத்திவிட்டு மீதத் தொகையை Aggressive Hybrid Fundல் முதலீடு செய்து 10% கூட்டு வட்டியை எதிர்பார்த்தால் கிடைக்கும் தொகை (தோராயமாக) -> 9,30,000(LICன் திட்ட முதிர்வில் கிடைக்கும் தொகையைப் போல் இருமடங்கு). Aggressive Hybrid Fundல் கிடைக்கும் லாபத்தொகைக்கு நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி 10% செலுத்த வேண்டும்.

தெரிந்து கொள்வோம்:
LIC Endowment ஆரம்பித்து முப்பது நாட்களைக் கடந்து விட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசியை நிறுத்தும் பட்சத்தில் எந்த தொகையும் திரும்பக் கிடைக்காது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்திற்கு முன் பாலிசியை Surrender செய்தால், முதல் வருட பாலிசி தொகையைக் குறைத்து  விட்டு Special surrender value கணக்கின் படி ஒரு குறிப்பிட்ட தொகை திரும்பத் தரப்படும். பெரும்பாலும் போட்ட பணமே திரும்பவராது. தயவு செய்து Special surrender value கணக்கை கேட்க வேண்டாம் . இதனால் பெரும்பாலானவர்களுக்கு எந்த உபயோகமுமில்லை.

LIC ஏஜெண்டுகளுக்கு Endowment பாலிசிகளுக்கு முதலாண்டுக்கு தோராயமாக 25% கமிஷனும், அதன் பிறகு ஒவ்வொரு தவணைக்கும் 5% முதல் 7.5% வரை கமிஷனும் தரப்படுகிறது. ஏஜெண்டுகளின் சேவை ஆண்டுகளை பொறுத்து கமிஷன் மாறும்.

அனைத்து கணக்குகளையும் கீழ்க்கண்ட இணைப்பில் கொடுத்துள்ளேன். https://docs.google.com/spreadsheets/d/1DaFbqi0_K_69all7kqTn3GChZPqy3uDVA7HecO6I-iI/edit?usp=sharing
கணக்கில் தவறிருந்தாலோ அல்லது புரிதலில் தவறிருந்தாலோ சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன் அல்லது தெரிந்து கொள்கிறேன் 

நன்றி:

https://freefincal.com