இப்பதிவை எழுதியவர் : திருமலை கந்தசாமி
பழைய ஓய்வூதியத் திட்டம்:
பணியாளர் பணி ஓய்வின் பொழுது பெற்ற Basic + DA வில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் கணக்கிடப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியம் பெற குறைந்த பட்சம் 10 வருடம் பணியில் இருந்திருக்க வேண்டும் .குறைந்த பட்ச ஓய்வூதியத்தொகை – 7,850 (மாதம்)
http://cms.tn.gov.in/sit…/default/files/…/fin_e_313_2017.pdf
30 வருடத்திற்கு மேல் பணியில் இருந்திருந்தால் (முழு ஓய்வூதியம்) -> 50% * (10 மாதங்கள் Basic + DAன் சராசரி / பணி ஓய்வின் பொழுது பெற்ற Basic + DA)
30 வருடத்திற்கு கீழ் பணியில் இருந்திருந்தால் -> 50% * (10 மாதங்கள் Basic + DAன் சராசரி / பணி ஓய்வின் பொழுது பெற்ற Basic + DA) * (மொத்தப் பணியின் அரை ஆண்டுகள் / 60).
http://www.tn.gov.in/karuvoolam/pension/suppen.htm
ஊழியரின் இறப்பிற்குப் பின் அவரைச் சார்ந்தோருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்படும் . இதன் கணக்கீட்டை அறிய இங்கு பார்க்கவும் .
http://www.tn.gov.in/karuvoolam/pension/fampension.htm
ஓய்வூதியம் தவிர்த்து மேலும் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. அதில் மிக மிக முக்கியமானது Pension – Commutation. அரசு ஊழியர் பணி நிறைவின் போது ,அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தின் 33% சதவீத பணத்தை முன்பணமாக ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். அரசு பதினைந்து ஆண்டு பணத்தையும் மொத்தமாக கொடுக்காமால் , 8% வட்டியை ஆதாரமாகக்கொண்ட commuatation table ன் படி பணத்தைக் கணிக்கிட்டு வழங்கும். http://www.tn.gov.in/karuvoolam/pension/commutab.htm
ஒரு எளிய உதாரணம். ஓய்வூதியத் தொகை – 30,000.Commutation value -> 33% * 30,000 -> 10,000.
பணி ஓய்வின் பொழுது வயது – 58. எனவே நாம் commutation table ல் 59 வயதிற்கான 8.371 யை கணக்கில் கொள்ளவேண்டும்.
ஊழியர்க்கு கிடைக்கும் மொத்த ரொக்கம் (commutation lump sum) -> 10,000 * 12 (மாதம்) * 8.371 -> 10,04,520.
commutation கழிவிற்க்கு பிறகு ஓய்வூதியத் தொகை – 20,000.பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு மொத்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். அரசும் ஓய்வூதியத் தொகையில் increment கொடுக்கும் .
http://cms.tn.gov.in/sit…/default/files/…/fin_e_313_2017.pdf
—-
CPS – Contribution Pension Scheme
2003 April க்கு பிறகு பணியில் சேர்ந்த பணியாளரின் Basic + DA வில் இருந்து 10% சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு CPS நிதியில் வரவு வைக்கப்படும். பிடிக்கட்ட தொகைக்கு இணையான தொகையினை அரசும் தன் பங்கீடாகத்தரும்(employer contribution ).
ஒரு எளிய உதாரணம் .பணியாளரின் Basic + DA – 25,000.
CPS ற்கு பிடிக்கப்படும் தொகை 2,500(employee) .
அரசு வழங்கும் தொகை 2,500 (employer).
CPS நிதியில் வரவு – 5,000 (employee + employer).
தற்போதைய நிலவரப்படி அரசு 8.6% வட்டி வழங்குகிறது. பணி ஓய்வின் பொழுது அரசு ஊழியர் குறிப்பிட்ட சதவீத பணத்தை(i.e. 60%) ரொக்கமாக பெற்றுக்கொண்டு மீதத்தொகையினை((i.e. 40%) கொண்டு ஒரு Annuity திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் . (மேலும் விவரங்களுக்கு என்னுடைய NPS பதிவை பார்க்கவும்).
—
அரசு ஊழியரின் புகார்கள்:
1. CPS திட்டமே போலி , பணம் என்னானது என்றே தெரியவில்லை.பணத்திற்கு கணக்கில்லை.
விளக்கம் : உண்மையில்லை. http://cps.tn.gov.in/public/ என்ற இணையதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் வரவை சரி பார்த்துக்கொள்ளலாம். Statement update காலதாமதமாகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 27 Jan 2019 அன்று Randomயாக நான் சரிபார்த்த பொழுது Feb 2018 வரை employer +employeeன் வரவு மற்றும் வட்டியினை பார்க்க முடிந்தது.
2.CPS திட்டம் நிலையற்றது. அரசு பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது.
விளக்கம் : உண்மையில்லை. சிலர் NPS உடன் இதை குழப்பிக்கொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன். அரசு இந்த பணத்தை எப்படி கையாள்கிறது என எனக்குத்தெரியவில்லை. ஆனால் தற்போது 8.6% வட்டி வழங்குகிறது.
3.CPS திட்டத்தினால் பென்ஷனே கிடையாது.
விளக்கம் : தவறான புரிதல். அரசு பென்ஷன் வழங்காது . ஆனால் பணி முடிவின் பொழுது பணியாளரே CPS ன் ரொக்கத்தொகையைக் கொண்டு தனக்கான Annuity திட்டத்தினை தெரிவு செய்து ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
4.CPS திட்டத்தினால் குறைவான பென்ஷனே கிடைக்கும்.
விளக்கம் : ஓரளவுக்கு சரிதான். ஏனென்றால் பணி ஓய்வு சமயத்தில் பெறும் Increment, CPS ன் மொத்தத்தொகையில் பெருமளவு மாற்றத்தை கொடுக்காது. மேலும் பாதுகாப்பான முதலீடு என்பதால், 8.6% வட்டி குறைவான returnsயையே கொடுக்கும். பணி ஓய்விற்க்கு பிறகு அரசு ஓய்வூதியத்தில் increment கொடுக்கும் . CPS ல் கிடைக்காது.
5.CPS திட்டத்தினால் Commutationயே கிடைக்காது. ரொக்கத் தொகை கிடையாது.
விளக்கம் : பாதி சரி, பாதி தவறு. CPS ன் மொத்தத்தொகையில் குறிப்பிட்ட சதவீத பணத்தையும்(i.e. 60%) ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இது Commutation கிடையாது,பங்களிப்பு பணம் .
6.CPS ல் பணியாளர் இறப்புக்கு பின் பென்ஷனே கிடையாது.
விளக்கம் : தவறான புரிதல். Annuity ல் நிறைய திட்டங்கள் உள்ளன. அதில் அதிக சதவீத வட்டி தரும் ஒரு திட்டத்தை எடுத்து குழப்பிக்கொள்ள வேண்டாம் . உங்களுக்கான திட்டத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். https://economictimes.indiatimes.com/…/tomorro…/48326210.cms
7.CPSல் பணியாளர் இடையில் மரணமடைந்தால் பென்ஷனே கிடையாது.
விளக்கம் : ஓரளவுக்கு சரிதான். CPS ன் மொத்த வரவுத்தொகை குறைவாக இருக்கும். அதனால் Annuity செய்ய அதிகப்பணம் இருக்காது. இதை ஈடு செய்ய ஒரு Term Plan எடுத்துக்கொள்ளலாம்.
8.CPSல் கார்போரேட் உடன் கூட்டு.
விளக்கம் : தவறான புரிதல். Annuity ல் சில சிறப்பான திட்டங்களை HDFC ,ICICI ,KOTAK,etc. போன்ற தனியார் வங்கிகள் வழங்குகின்றன. ஆனால் Annuity நிறுவனத்தை தேர்வு செய்யும் உரிமை பணியாளருக்கே. தனியார் நிறுவனத்தில் நம்பிக்கையில்லையெனில் SBI அல்லது LIC யினை தேர்வு செய்து கொள்ளலாம்.
9.CPSன் பென்ஷன் தொகை எதிர்கால பண வீக்கத்தை(Inflation)யை ஈடு கட்டாது.
விளக்கம் : உண்மை . ஆனால் 8.6% வட்டியை அதிகரிக்க பகுதி பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை பற்றி ஆராயலாம் .இதை கூட்டமைப்புகள் ஏற்றுக் கொள்வது சந்தேகமே . NPS மாதிரி பணியாளருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் மிகச் சிறப்பாய் இருக்கும்.
10. CPS யால் பணியாளருக்கு நன்மையில்லை. பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்தது
விளக்கம் : பணியாளரின் பார்வையில் உண்மை தான். ஒவ்வொரு மாதமமும் 10% (Basic + DA )பிடிக்கப்படுவதை பணியாளர்கள் விரும்பவில்லை. ஆனால் CPS அரசுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியத்தினால் வரும் மிகப்பெரும் பொருளாதார சுமையினை குறைக்கும் .