இதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் எனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், அசெட் அல்லோகேசனையும் வயது ஆக ஆக எப்படி முதலீட்டை திருத்தியமைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதையும் இதை விட எளிதாக விளக்கிவிட முடியாது.
இளம் வயதில் ஈக்விட்டி அதிகமாகவும் கடன் பத்திரம் / ஃபிக்ஸ்ட் இன்கம் கேட்டகரியில் கம்மியாகவும் ஆரம்பிக்கவேண்டும். அதுவும் ஈக்விட்டியில் ரிஸ்க் அதிகமான மிட்கேப்பில் நிறைய முதலீடு செய்யலாம் (தனிப்பட்ட முறையில் எனக்க்கு ஸ்மால் கேப் ஃபண்ட்களில் நாட்டமில்லை)
சந்தை இறக்கத்தில் மதிப்பு குறைந்தாலும் மீண்டு வருவதற்கு நிறைய காலம் இருக்கிறது. வயது அதிகரிக்க படிப்படியாக அதிக ரிஸ்க் ஈக்விட்டியிலிந்து கம்மி ரிஸ்க் ஈக்விட்டி கேட்டகரிக்கும் பிறகு ஈக்விட்டியை குறைத்து கடன் பத்திரங்கள் / ஃபிக்ஸ்ட் இன்கம் முதலீட்டையும் அதிகரித்துக்கொண்டே வரவேண்டும்.
ஓய்வு கால இலக்கான தொகையை அடைந்ததும் அல்லது ரிட்டையர்மெண்ட் அருகில் வந்ததும் 10-20% வரை மட்டும் ஈக்விட்டியில் வைத்து விட்டு மிச்சத்தை அசலுக்கு ஆபத்தில்லாத முதலீடுகளில் வைப்பது நலம்.
இதில் சொன்னது போலன்றி 50 வயதில் லார்ஜ் கேப்பை விட்டு வரவேண்டியதில்லை.
இ எல் எஸ் எஸ் (வரிவிலக்கு ஃபண்ட்கள்) இல் 10% என்று இல்லாமல் தேவைப்படும் அளவுக்கு முதலீடு செய்யலாம். 20 வயதுகாரர்களுக்கு எஃப் டி தேவையேயில்லை. கேஷ் இன் ஹாண்ட் 10% வைத்துக் கொள்வதும் முதலீட்டுக்கு நல்ல ஆப்பர்ச்சுனிட்டி வரும்போது உயபோகப் படுத்திக்கொள்ளத்தான் அதை 20% அளவுக்கெல்லாம் அதிகரிக்கத் தேவையில்லை (எமெர்ஜென்சி ஃபண்டையும் இதையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது)
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணும் எங்கேருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என்போருக்கு இது ஒரு நல்ல துவக்கப்புள்ளியாக இருக்கும்.
https://www.facebook.com/photo.php?fbid=2406674186030913&set=a.778015465563468&type=3&theater