ஒரு வாட்சப் க்ரூப்பில் அலுவலகத்தில் தரும் ஹெல்த் இன்சூரன்ஸை மட்டும் நம்பி இருக்கலாமான்னு ஒரு டாபிக் ஓடிச்சு.. எனக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்து அதிகம் தெரியாததால் பெரிய பங்களிப்பை செய்ய முடியவில்லை. நண்பர் Thirumalai Kandasami அங்கு சொன்ன விசயங்களை இங்கு பகிர்கிறேன்
இந்தியா – ஏன் தனி மருத்துவ காப்பீடு வேண்டும் .? நிறுவனம் தர்றது பத்தாதா .?
1. காப்பீட்டு தொகை மிகக்குறைவு . கணவன் ,மனைவி மற்றும் இரு குழந்தைகள் அனைவருக்கும் சேர்த்து 3 லட்சம் (பெரும்பாலான நிறுவனங்கள் ) என்பது மிகக்குறைவு .
2.பெரும்பாலான நிறுவனக்காப்பீடு, அறை செலவு மற்றும் பிற செலவுகளை தருவதில்லை. மேலும் நிறைய “Terms and conditions” உள்ளன.
பல சிகிச்சைகளுக்கு முழுப்பணம் கிடைக்காது (percentage basis).
3. பெரும்பாலான நிறுவனக்காப்பீடு Cashelss Claim மட்டுமே கொண்டுள்ளன (தமிழக அரசு). சிறு நகரங்களில் வசிப்போருக்கும் ,அவசர கால நிலைக்கும் இது ஒத்து வராது.
சிறு விபத்தின் மூலம் அப்பாவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 2014ல் திருச்செங்கோட்டில்(சிறு நகரம்) எந்த மருத்துவமனையிலும் Cashless claim கிடையாது . இதற்காக ஈரோடு கொண்டு செல்ல விரும்பாமல் , சொந்த காசை செலவு செய்தோம்.
மேலும் விபத்து நடைபெறும் நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தான் செல்வோம்/கொண்டு செல்லப்படுவோம் (cashless hospital என்றெல்லாம் பார்க்க முடியாது )
4. நிறுவனக்காப்பீடுகளில் போனஸ் கிடையாது .(நோ benefit for no claim ).
5. நிறுவனம் மாறும் பட்சத்தில் Pre existing diseaseற்கு மூன்று முதல் ஐந்து வருடம் வரை காத்திருக்கும் நிலை வரலாம் .
6. குறு நிறுவனங்களில் தொழிலாளிக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும் .
7. நிறுவனக்காப்பீடு நிரந்தரமற்றது. ஒரே நிதி ஆண்டில் பெரும்பாலான claim நடைபெறும் பட்சத்தில் எந்த விதியும் மாற்றி அமைக்கப்படலாம்.(no claim for dependents , 50% cieling on sum assured for dependets , pre existing diseases not covered ).
மொத்தத்தில் நிறுவனக்காப்பீடு என்பது தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு மாதிரி . அதை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது.