வங்கிகளின் வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொண்டே வரும் மத்திய அரசு ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கும் ஆறுதல் பரிசு.
இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு வைப்பு நிதி வட்டியாக 8 முதல் 8.3% வரை வட்டி வழங்கப் படுகிறது (ஆண்டுக்கு ஒருமுறை வட்டி வாங்கினா 8.3%, மாதாமாதம் வேணும்னா 8%)
இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் முதலீடு செய்யலாம். மாதம் ஐயாயிரம் ரூபாய் வரை பென்சன் தரக்கூடிய நல்ல திட்டம்.
10 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு நிதி – தமிழ்ல சொன்னா ஃபிக்ஸ்ட் டெபாசிட்.
என் கருத்தில் திட்டத்தின் நல்லவை
1. நாட்டில் வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில் 8% உத்திரவாதம் நல்ல விசயம். இப்போதைக்கும் 7-7.5% இருக்கும் வட்டி இன்னும் சில ஆண்டுகளில் 5% அளவுக்குப் போய் விடும்
2. தற்போதைய நிலையில் 10 ஆண்டுகளுக்கு இந்த வட்டி விகிதம் என்பது லாபகரமான விசயம்
3. Annuity product களில் வயதை பொருத்து வட்டி விகிதம் இருக்கும் (The older you are, higher the interest rate will be) இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம்
4. வைப்பு நிதியில் 75% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்
திட்டத்தின் அல்லவை
1. இத்திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மாதம் 10000 ரூபாய் என்பது சொற்பமான பணம். ஓய்வோதியக் காரர்களின் தேவையில் ஒரு சிறு பகுதியை மட்டுமே இது பூர்த்தி செய்யும்
2. பிற வைப்பு நிதிகளைப் போலவே இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு கிடையாது, இது என்னளவில் பெரிய குறை இல்லை. ஏன்னா 60 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் வரையிலும் 80 வயதுக்க்கு மேற்பட்டோர் 5 லட்சம் வரையில் வருமான வரி கட்டத் தேவையில்லை. இதற்கு மேலும் சம்பாதிப்போர் வரி கட்டுவது நியாயமே.
3. வெகு அறிதான காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக 10 ஆண்டுகளுக்கு முன் பணம் திரும்பப் பெற முடியாது
conclusion : ஓய்வூதிக்காரர்களின் முழுத் தேவையையும் பூர்த்தி செய்யாவிட்டாலும் மாதம் 10,000 ரூ வரை இதன் மூலம் பெற முடியும். என்னளவில் இது ஒரு நல்ல திட்டம்.