காப்பீட்டின் அளவு ரொம்ப பெரிய சப்ஜெக்ட் – ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகர் க்ளையண்ட்டின் எல்லா விவரங்களையும் (வருமானம், செலவு, உடல்நிலை, சேமிப்பு, கடன் இன்னபிற) ரிட்டையர்மெண்ட்டுக்குப் பிறகு என்ன மாதிரி லைஃப் ஸ்டைல் வேண்டும் என்றும் தெரிந்து கொண்டு (கிராமத்தில் அமைதியான வாழ்க்கை அல்லது உலகம் முழுதும் சுற்றும் ப்ளான் இன்னபிற) அதற்கு ஏற்றாற் போல காப்பீட்டை டிசைன் செய்யணும் (சம் அஸ்யூர்ட், காலம்) – இதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாச் செய்யும் அளவுக்கு அதுவும் இலவசமா செய்யும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை. அதனால் தான் பொதுவாக ஆண்டு வருமானத்தின் 10 மடங்கு காப்பீடு இன்றியமையாதது, 20 மடங்கு ஹெல்தியான காப்பீடு என்கிறேன், இது பெரும்பான்மையானவர்களுக்கு சரியா வரும். வெகு சிக்கனமாக வாழ்ந்து கடன் கம்மியா வச்சிருப்பவருக்கு 20 மடங்கு அனாவசியம், சம்பளம் முழுவதற்கும் இ எம் ஐ வச்சிக்கிட்டு சேமிப்பே இல்லாதவருக்கு 10 மடங்கு மிகக் குறைவு… டெர்ம் பாலிசியே வாங்காமல் எண்டோமெண்ட்டையே வாங்கும் சமூகம் இப்பத்தான் டெர்ம் பாலிசி பக்கம் திரும்புகிறது.. அவர்கள் ஒரு கோடிக்கு டெர்ம் பாலிசி எடுத்தாலே சந்தோசம்..
இப்ப கேள்விக்கான நேரடி பதில் – வயது முக்கியமில்லை – யாரோட சம்பளத்தை நம்பி குடும்பம் இருக்கோ அவர்கள் எல்லோருக்கும் காப்பீடு அவசியம். 35 வயது ஆகும் ஒருவர் 30 ஆண்டு காலமும் 50 வயதாகும் ஒருவர் 15 ஆண்டு காலமும் எடுக்கணும். இன்று நான் இறந்தால் என் மனைவி அவர் வாழ்நாள் முழுதும், மகள் சம்பாதிக்கும் வயது வரைக்கும் எவ்வளவு செலவாகும், அதில் எவ்வளவு என் சேமிப்பு கொடுக்கும் என்று கணக்கிட்டு மிச்சத்தை இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்யணும். எனக்கு 65 வயதில் ரிட்டையர் ஆகும் அன்று நானும் மனைவியும் மிச்ச காலத்தை கழிக்கும் அளவுக்கு சேமிப்பு இருக்குமாறு திட்டமிடவேண்டும்.