Home Loan for Dummies

Home Tax Deduction Mortgage Interest royalty-free stock photo

வட்டி விகிதங்களைக் குறைத்து மக்களின் சேமிப்பு முழுவதையும் ஷேர் மார்க்கெட் பக்கம் திருப்பும் செயல் நல்லதா கெட்டதா என்பது மாபெரும் விவாதத்துக்கு உரியது.

ஆனால், இதனால் விளைந்த ஒரு நன்மை, நாம் வாங்கும் கடனுக்கும் வட்டி குறைகிறது. இப்போதைக்கு 30 ஆண்டுகளுக்கான வீட்டுக்கடனுக்கான வட்டி 8.5 % ஆக இருக்கிறது. 
இந்தியாவில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் குறைந்து கொண்டு வரும், இருந்தாலும் வங்கிகள் fixed rate of Interest வழங்காமல் Floating rate 
வழங்குவது நுகர்வோருக்கு லாபமே.

அரசியல், பொருளாதாரம், பொருளாதாரத்துக்குப் பின் இருக்கும் அரசியல் இதுக்குள்ள எல்லாம் போகாமல், ஹோம்லோன் வாங்கறவங்க என்ன செஞ்சா பலனளிக்கும்னு யோசிக்கலாம்

1. அதிமுக்கிய பாயிண்ட் live within your means – உங்க வருமானத்தில் இஎம் ஐ மூன்றில் ஒரு பங்கு தாண்டாமல் பாத்துக்கொள்ளவும்

2. இன்சூரன்ஸ் : அம்பது லச்ச ரூபாய்க்கு வீடு வாங்கறீங்கன்னு வைங்க, 40 லட்ச ரூபாய் வங்கி கடன் தரும். இதுக்கு இணையாக 40 லட்ச ருபாய்க்கு Term life insurance எடுப்பது
இன்றியமையாதது. ஒரு வேளை நீங்க இறக்க நேரிட்டால், உங்க குடும்பத்துக்கு வீடு கிடைக்கும், நீங்க இல்லாமல் அவர்களால் தவணை கட்ட முடியாது, வீட்டை விற்கும் நிலை ஏற்படும்
அமெரிக்காவில் இருப்போர் உங்க சம்பளத்துக்கு இணையா disability insurance உம் எடுங்க.. இது இந்தியாவில் இருக்கான்னு தெரியாது – அமெரிக்காவில் இருக்கு – விபத்து, நோய்
போன்ற காரணங்களால் உங்களால் வேலைக்குப் போக முடியாவிட்டால் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுக்கு மாதா மாதம் பணம் தரும்.

3. additional payments : மேலே சொன்ன உதாரணத்தில் – வீட்டின் விலை 50 லட்சம், கடன் 40 லட்சம், காலம் 30 ஆண்டுகள், வட்டி விகிதம் 8.5 % – இதன்படி உங்க மாதாந்திரத் தவணை
ரூ 30,756. 54 இதை 360 மாதங்கள் கட்டினால் வீடு உங்களுக்குச் சொந்தமாகும். கடனை முடிக்கும் போது நீங்க கட்டிய தொகை ரூ 1, 10, 72, 354 அதாவது வட்டி மட்டும் 70 லட்சத்துக்கும் மேல். 
மாதாந்திரத்தவணையை கட்டி விட்டு அதற்கு மேல் அதில் 10 % அதாவது மாதா மாதம் 3000 ரூ additional payment கட்டினால், இதே கடன் 21 ஆண்டுகள் 8 மாதங்களில் முடிந்து விடும். 
70 லட்சத்து 72 ஆயிரத்துக்கு பதில் 47 லட்சத்து 44 ஆயிரம் மட்டுமே வட்டியாக செலுத்துவீர்கள். அதாவது மாதா மாதம் 3000 ரூ அதிகம் கட்டுவதன் மூலம் நீங்க சேமிக்கும் தொகை 23
லட்சத்துக்கும் அதிகம்

4. சேமிப்பு : நீங்க வாங்கும் கடனில் 0.1 % அதாவது 40 லட்சத்தின் 0.1% ரூ 4000 மாசா மாசம் சேமிக்கத் துவங்குங்க. அதை ஒரு நல்ல மியூச்சுவல் ஃப்ண்டில் ELSS / SIP முறையில் சேமிங்க
மேலே சொன்ன 3000 ரூ கூடுதல் தொகை கட்டி வந்தால் கடன் 256 மாதங்களில் முடியும். அதே 256 மாதங்கள் மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால முதலீடு செய்து வந்தால் குறைந்தது 10% 
வளர்ச்சி இருக்கும். 256 மாத முடிவில் உங்களுக்கு கிடைப்பது ரூ 35, 36, 977, முதல் போக மிச்சம் ரூ 25,12, 955. இதே காலத்தில் நீங்க செலுத்திய வட்டி 47 லச்சம் அதில் 25 லட்சத்தை மாதம் 4000 ரூ
சேமிப்பதன் மூலம் திரும்ப பெற முடியும். மார்க்கெட் நல்லா போனா 15% சாத்தியம் – அப்ப உங்களுக்கு வட்டி மட்டுமே ரூ 63,52,231 கிடைக்கும் – அதாவது நீங்க செலுத்திய வட்டியை விட 16 
லட்சம் அதிகம்.

வீடு வாங்கப் போகும் முன் மாதா மாதம் உங்களால் இவற்றில் எதை எல்லாம் கவர் செய்ய முடியும் என்று பார்த்து விட்டு வாங்குதல் நலம்….

Please follow and like us: