ஆயுள் காப்பீடு – டாப் 10

ஆயுள் காப்பீடு எடுக்கறதுக்கு ஆயிரம் தடவை யோசிக்கும் பலரும் ஒரு வேளை க்ளெயிம் செய்ய வேண்டியிருந்தால், அதற்கானவற்றை செய்யத் தவறி விடுகிறோம். ஆயுள் காப்பீடு எடுப்போர் செய்ய வேண்டிய டாப் 10

1. டெர்ம் பாலிசி தவிர வேறு எதையும் வாங்க வேண்டாம்

2. நேத்து கூட ஒருத்தர் 86 வயது வரை டெர்ம் பாலிசி எடுக்கலாம்னு இருக்கேன் என்றார் – ஆயுள் காப்பீடு என்பதே திடீர் வருமான இழப்பை ஈடுசெய்வதற்குத்தான். வருமானம் ஈட்டும்வரைதான் இன்சூரன்ஸ் தேவை, நீங்க வருமானம் ஈட்டுவதை நிறுத்தியபின், உங்க மரணம் குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதிக்காது – அப்போது உங்களுக்கு காப்பீடு தேவையில்லை. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருப்போர் ரிட்டையர்மெண்ட் தேதி வரை டெர்ம் பாலிசியில்ன் காலம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், ரிட்டையர்மெண்ட்க்கு தனியே சேமிக்கத் தொடங்குங்கள். உங்க ரிட்டையர்மெண்ட் கோலை அடைந்ததும் டெர்ம் பாலிசியை நிறுத்திவிடலாம்.

3. டெர்ம் பாலிசி எடுக்கும் போது தெளிவாக ஒருவரை நாமினியாகப் போடுங்கள். மகனையோ மகளையோ நாமினியாக்கி உங்க மனைவியை அவர்கள் தயவில் விடாமல், மனைவி / கணவனை நாமினி ஆக்குங்கள்

4. நாமினியின் லீகல் பேரை முழுமையாக விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள். அந்தப் பேர் உங்கள் திருமணச் சான்றிதழ், ரேசன் கார்ட் போன்ற ஆதாரங்களில் உள்ளபடி இருப்பது அவசியம்.

5. பாலிசி குறித்த ஆலோசனையின் போதும், பாலிசி கையெழுத்திடும் போதும் நாமினி உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் – விண்ணப்பத்தில் கொடுக்கும் தகவல்களை அவரையும் ஒருமுறை சரி பார்க்கச் சொல்லுங்கள்.

6. பாலிசி கைக்கு வந்ததும், அதை யாருக்கும் தெரியாமல் உங்களிடம் வைத்துக் கொள்ளாமல், நாமினியின் பொறுப்பில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள், க்ளெயிம் செய்யப் போவது நீங்கள் இல்லை.

7. ஒரு வேளை க்ளெயிம் செய்ய நேரிட்டால், பாலிசி டாக்குமெண்ட், நாமினி தன்னை நிரூபிக்க ஒர் ஆவணம், அவருக்கும் உங்களுக்குமான உறவை நிரூபிக்க ஒர் ஆவணம் இவற்றுடன் எங்கு யாரை அணுக வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்லி வைக்கவும்

8. ஒரு வேளை நீங்க இறக்கும் முன் நாமினி இறந்து விட்டால், உடனே வேறு ஒருவரை நாமினியாக நியமிக்கவும்

9. மறக்காமல் பாலிசி ப்ரீமியத்தை உரிய காலத்தில் செலுத்தவும்.

10. பாயிண்ட் நம்பர் ஒன்றை மீண்டும் ஒருமுறை படிக்கவும்

Image result for life insurance

Please follow and like us:

2 thoughts on “ஆயுள் காப்பீடு – டாப் 10

  1. சின்ன குழப்பம் இருந்தது .இப்போ சரியாயிடுச்சி.அது என்னான்னா ஒய்வுக்கு பின்னர் பாலிசி கட்ட வேண்டாம் என்பது.

  2. டெர்ம் பாலிசி தவிர வேற ஏதும் வாங்க வேண்டாம், காப்பீட்டின் அளவு உங்க ஆண்டு வருமானத்தின் 10-20 மடங்கு இருக்கட்டும், காப்பீட்டு காலம் நீங்க ரிட்டையர் ஆகற வரை மட்டும் இருக்கட்டும் – இவ்வளவுதாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *