இன்சூரன்ஸ் அறியா தேசம்

Image result for bank locker picture

பாதுகாப்பு பெட்டகம் குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்து பல கண்டனங்களையும் கமெண்ட்களையும் பாக்கறோம்

முத்தாய்ப்பா ஒருத்தர் சொன்னார் – அம்பானியின் கசின் தான் ஆர் பி ஐ கவர்னர், அவர் மோடியின் சொல் பேச்சு கேட்டு இப்படி மாத்திட்டார்னு.. எதால சிரிக்கறதுன்னு தெரியல. ஒரு விசயத்தைப் பத்தி பேசும் முன் அது குறித்து அடிப்படையை அறிவாவது இருத்தல் நலம்

பாதுகாப்புப் பெட்டகம், தமிழ்ல சொன்னா பேங்க் லாக்கர் – இது வங்கிகளால் வாடகைக்கு விடப்படுமிடம். அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்சில் ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதைப் போல வாங்கி ஒரு க்யூபிக் ஃபீட் இடத்தை உங்களுக்கு வாடகைக்கு விடுகிறது. வீட்டு ஓனர் வாடகைதாரர் இல்லீகல் காரியம் செய்ய அனுமதிக்க மாட்டார், அது போல வங்கிகள் லாக்கர் வாடகைகாரர் லாக்கரில் பணம், சட்ட விரோத பொருட்கள் போன்றவற்றை வைக்க அனுமதிக்காது, மத்தபடி லாக்கரில் நீங்க என்ன வைக்கறீங்க என்று வங்கி கேட்காது, நீங்களும் சொல்ல மாட்டீங்க, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை

வண்டி பார்க்கிங்கில் கூட நீங்க செலுத்தும் தொகை வண்டி நிறுத்த மட்டுமே அன்றி வண்டியின் பாதுகாப்புக்கு அல்ல, என்ன வண்டி நிக்க வைக்கறீங்க, அதன் தோராய மதிப்பு என்னனு தெரியும் போதே பார்க்கிங் லாட் ஓனர்கள் வண்டிக்கு பாதுகாப்போ காப்பீடோ (இன்சூரன்ஸ்) வழங்குவதில்லை. என்ன இருக்குன்னே தெரியாத லாக்கருக்கு வங்கி எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? ஒரு வேளை களவு போனாலோ அல்லது தீ, வெள்ளம் போன்ற பேரழிவில் சேதமானாலோ.. வாடகைதாரர் தான் ஒரு கோடிக்கு நகை வைத்திருந்தேன் என்று சொன்னால் வங்கி என்ன செய்யும்?

நீங்க வைக்கும் பொருள் என்ன, அதன் மதிப்பு என்னன்னு தெரிஞ்சாலாவது பொருட்களுக்கான ஜெனரல் இன்சூரன்ஸ் வங்கியால் வழங்க முடியும். பேச்சுக்கு அப்படி ஒரு வசதியை வங்கி வழங்கத் தொடங்கினால் – நீங்க வங்கி மேனேஜரிடம் வைக்கும் பொருள் அனைத்தையும் காட்டி அவற்றுக்கு அப்ரைசல் வாங்கி வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும், இன்சூரன்ஸுக்குன்ன்னு தனியா செலவும் ஆகும் -இதுக்கெல்லாம் நீங்க தயாரா?

லாக்கரில் வைக்கும் பொருளுக்கு பாதுகாப்பு உண்டு – நீங்க வைக்கும் பொருட்களை தகுதியான ஆட்களிடம் காட்டி அப்ரைசல் வாங்குங்க, அதை ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் காட்டி பொருட்களுக்கு காப்பீடு வாங்குங்க. இது லாக்கரில் வைக்கும் பொருட்களுக்கு மட்டுமல்ல நீங்க வீட்டில் வைத்திருக்கும் விலை மதிப்பு மிக்க பொருட்களுக்கும் பொருந்தும்.

இதுதான் உலக நடைமுறை. இந்தியாவிலும் இன்றும் என்றும் அப்படித்தான். இது நீங்க லாக்கர் வாங்கும் போது கையெழுத்து போடும் பேப்பரிலும் இருக்கும். ஆர் பி ஐ ஏன் இப்போது இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதுன்னு தெரியல ஆனா இது புதிதல்ல.. எப்பவும் இருக்கறதை இப்ப சொல்லியிருக்காங்க

மோடியை எல்லாத்துக்கும் திட்டறதை விட்டுட்டு போய் ஜெனரல் இன்சூரன்ஸ் வாங்குங்க

Please follow and like us: