PSU Focused ஃபண்ட்களுக்கு வரிச்சலுகை – ஒரு பார்வை

இவ்வாண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒரு வருமானவரிச் சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுநாள் வரை ELSS (Equity Linked Saving Schemes) மியூச்சுவல் ஃப்ண்ட்களில் செய்யும் முதலீட்டுக்கு மட்டும் வருமான வரி விலக்கு இருந்தது. இதில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுகள் திரும்பப் பெற முடியாது.

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மட்டும் உள்ளடக்கிய ஃபண்ட்களுக்கும் இச்சலுகை விரிவுபடுத்தப்படுவதாக நிதியமைச்சர். திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வருமானவரிச் சலுகை எனும் மந்திரச் சொல்லே நம்மில் பலருக்கு ஒரு திட்டத்தில் முதலீடு செய்யப் போதுமானதாக இருக்கிறது (இல்லேன்னா இத்தனை எண்டோமெண்ட்ட்டும் யூலிப்பும் விற்றிருக்குமா?) வெறும் வருமானவரிச் சலுகைக்காக இதில் முதலீடு செய்யலாமா? விரிவாகப் பார்க்கலாம்

இது என்ன வகை முதலீடு? இது 100% பங்குச் சந்தை சார்ந்த முதலீடு

இது என்ன வகை மியூச்சுவல் ஃபண்ட்? இதை செக்டோரல் ஃபண்ட் என்று சொல்ல முடியாது. செக்டோரல் ஃபண்ட் என்பது ஒரே துறையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பது. இதை Thematic Fund என்று கூறலாம்.

முதலீடு எங்கு செய்யப்படுகிறது? இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீடுகளை வைத்து ONGC, NTPC, Coal India, IOC, REC, PFC, Bharat Electronics, Oil India, NBCC, NLC India and SJVN ஆகிய நிறுவனங்களில் பங்குகள் வாங்கப்படும்

இது ரிஸ்க்கானதா? பங்கு சார்ந்த எல்லா முதலீடுகளையும் போல் இதுவும் பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதே

இதன் சாதகங்கள் : வருமானவரிச்சலுகை, PSU க்கள் தவறாமல் நலல் டிவிடெண்ட் வழங்கும் என்பது தவிர வேற எந்த ப்ளஸ் பாயிண்ட்டும் எனக்குத் தென்படவேயில்லை

இதன் பாதகங்கள் : 1. வெறும் 11 நிறுவனப்பங்குகள் மட்டுமே உள்ளதால் Concentration Risk 2. PSU பொதுத்துறை நிறுவனப்பங்குகள் மட்டுமே இருப்பதால் PSU க்கு எதிரான செய்தி அனைத்தும் இதை கடுமையாக பாதிக்கும். 3. இவ்வகை ஃபண்ட்களில் ஒன்றான CPSE ETF (Reliance) கடந்த ஐந்தாண்டுகளில் 1.52% வளர்ச்சி மட்டுமே தந்துள்ளது, இதே நேரத்தில் நிஃப்டி 50 10.5% வளர்ச்சி தந்துள்ளது

இதில் முதலீடு செய்யலாமா? முதலீடு செய்வதும் செய்யாமல் விடுவதும் உங்க விருப்பம். எனக்கு வருமானவரிச் சலுகை தேவைப்பட்டாலும் நான் இதில் முதலீடு செய்யமாட்டேன். இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை நடத்தும் விதம் நாம் அறிந்ததே. PSU க்களிலிருந்து Disinvestment செய்வதுதான் இந்திய அரசின் குறிக்கோள். சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு விற்க முயன்றால் தனியார் நிறுவனங்கள் வாங்காது, கம்மி விலைக்கு விற்க முயன்றால் எதிர்க்கட்சிக்கள் ஊழல் என்று குரல் கொடுக்கும். கடைசியில் பி எஸ் என் எல் க்கு நேர்ந்த நிலைமை நேர்ந்த பின் ஒவ்வொரு நிறுவனமாக விற்கப்படும். 5-10 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் பெரிய ரிட்டர்ன் தரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

வருமானவரியை குறைக்க வேறு என்ன செய்யலாம்? எண்டோமெண்ட் பாலிசி தவிர வேறு எது வேணாலும் செய்யலாம்

ELSS (Equity Linked Saving Schemes) திட்டங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றின் ஃபண்ட் மேனேஜருக்கு நிறைய ஆப்சன்களும் மிகக்குறைந்த கட்டுப்பாடுகளும் உள்ளன. அவை PSU Focused ஃபண்ட்களை விட சிறப்பாகவே செயல்படும் என நினைக்கிறேன்.

எனக்குப்பிடித்த இரு ELSS ஃபண்ட்களைப்பாருங்கள்

NameAssets Under Mgmt# of Stocks5 Yr return
Axis Long term Equity 19,718 Crores3114%
ABSL Tax Relief 968850 Crores4613.21%
    

இவற்றிலோ அல்லது வேறு ELSS ஃபண்டிலோ அல்லது NPS, PPF, National Savings Certificate, Sukanya Samridhi போன்ற திட்டங்களிலோ உங்க விருப்பத்துக்கு ஏற்ப முதலீடு செய்யலாம்

குறிப்பு : இது என் கருத்து மட்டுமே. முதலீடு குறித்த முடிவு எடுக்கும் முன் நன்றாக யோசித்து சுய முடிவு எடுங்க. இது ஆலோசனை அல்ல எனவே உங்க முடிவு எவ்விதத்திலும் என்னை கட்டுப்படுத்தாது

Please follow and like us:

4 thoughts on “PSU Focused ஃபண்ட்களுக்கு வரிச்சலுகை – ஒரு பார்வை

  1. சார், வீட்டு கடன் பற்றி சற்று விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் –

  2. இங்கயே சில போஸ்ட்ஸ் இருக்கு, தேடிப்படிங்க, அப்புறமும் கேள்விகள் இருந்தா கேளுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *