`
இது எல் ஐ சியின் ஜீவன் உமங்கின் விளம்பரம்.
இதில் gross investment return @8 % என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் கொடுக்கப் பட்டிருக்கும் ரிட்டர்ன்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கணக்கு போட்டுப் பார்த்து விட்டேன் எப்படி பாத்த்தாலும் 8% ரிட்டர்ன்ஸ் வரவே மாட்டேங்குது..
100 நூறு வயசு ஆனப்புறமும் வாழ்ந்தா மெச்சூரிட்டி பணம் 1.66 கோடி ரூவா கிடைக்குமாம், ஒரு வேளை அதையும் சேத்து சொல்றாங்களோ என்னவோ தெரியல.
எனக்குத் தெரிஞ்சு ஜீவன் உமங் ப்ரீமியம் கட்டும் காலத்துக்குப் பிறகு சம் அஷ்யூர்டின் 8% (கட்டிய தொகையின் அல்ல சம் அஷ்யூர்டின் 8%) பென்சன் போல வழங்கும். இதில் குறிப்பிட்டு இருப்பதோ gross investment return @8 % , என்னுடைய ஆங்கில அறிவு வெரி லிமிடட், எனக்கு தெரிந்த வரையில் இதன் அர்த்தம் போட்ட பணத்துக்கு 8% என்பதேயாகும். எனக்குத் தெரிஞ்ச கொஞ்சூண்டு எக்சல் அறிவை வச்சி கணக்குப் போட்டால் 8% வரவே மாட்டேங்குது.
எல் ஐ சி தரப்பிலிருந்து யாராவது எப்படி 8% கிடைக்கும்னு சொன்னால், நானும் இதில் முதலீடு செய்யலாம்னு இருக்கேன். சொல்வாங்களான்னு பாக்கலாம்