ஓய்வுக்காக உழைத்திடு

Happy Retirement Clipart 4 - 257 X 192

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பென்சன் என்கிற safety net இருந்தது. ரிட்டையர் ஆகும் போது சொந்த வீடும் கையில் கொஞ்சம் காசும் இருந்தா போதும் என்கிற நிலை.  நிரந்தர வைப்பு நிதி தரும் வட்டியும் பென்சனும் வாழப் போதுமானதாக இருந்தது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருதாளார மாற்றத்துக்குப் பின் நிலை வெகுவாக மாறியுள்ளது. சந்தை பொருளாதாரத்தில் வாழத் தேவையும் அதிகமாகிப் போனது, பென்சனும் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவன ஊழியர்கள் ரிட்டையர்மெண்ட் குறித்து யோசிக்க ஆரம்பித்தன் விளைவே ம்யூச்சுவல் ஃபண்ட்களின் வளர்ச்சி.

2007 மார்ச் மாதம் 3 லட்சம் ரூபாய் கோடி அளவில் இருந்த ம்யூச்சுவல் ப்ஃண்ட்களின் AUM (Asset Under Management) 2014 ஆண்டு முதல் முறையாக 10 லட்சம் கோடியை எட்டியது, அதுக்கப்புறம் அசுர வளர்ச்சி கண்டு இன்று அது 20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது மூன்றே ஆண்டுகளில் இரு மடங்கு வளர்ச்சி அதுவும் பத்து லட்சம் கோடி ருபாய் அளவுக்கு.

பலரும் ம்யூச்சுவல் ஃபண்ட் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வந்தாலும், இன்னமும் இந்தியாவில் முதலீடு குறிந்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். இருந்திருந்தால், யூலிப் போன்ற திட்டங்களில் இன்னும் மக்கள் பணம் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

போகிற போக்கில் “மச்சான் ஒரு டீ சொல்லேன்” ரேஞ்சில் மாசம் அஞ்சாயிரம் இன்வெஸ்ட் பண்ணனும் நல்ல ம்யூச்சுவல் ஃப்ண்ட் சொல்லேன் அப்படிங்கறாங்க.

முதலீடு அப்படிங்கறது “one size fits all” ரெடிமேட் சட்டையல்ல எல்லாரும் ஒரே சட்டையை வாங்கி போட்டுக் கொள்ள. Retirement Planning / Wealth Creation என்பது வீடு கட்டுவது போல. இடம், டிசைன், வீட்டின் அளவு, எத்தனை பெட்ரூம் எல்லாம் முடிவு பண்ணி அப்புறம் நல்ல தரமான பொருட்கள் வாங்கி கட்டணும். டிசைன் செய்யவும் கட்டவும் அதற்காக படித்த அல்லது அனுபவம் உள்ள ஆட்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டணும். அப்பப்போ செக் பண்ணி தேவையான திருத்தங்கள் செஞ்சு வீட்டை கட்டி முடிக்கணும்

அது போல, முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் (1) எதுக்காக முதலீடு செய்யறோம் (Purpose), (2) நம்முடைய இலக்கு என்ன (Goal) (3) நம்முடைய risk tolerance என்ன? (4) மாதம் எவ்வளவு சேமிக்க முடியும் (5) எவ்வளவு நாள் தொடர்ந்து சேமிக்க முடியும் இதையெல்லாம் முடிவு செய்யணும்.

உதாரணத்துக்கு.. ஒருவருக்கு 30 வயது ஆகிறது. அவருக்கான பதில்கள் இப்படி இருக்கலாம். ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கணும், ரிட்டையர் ஆகும் போது 5 கோடி ரூபாய் இருக்கணும், மாதம் பத்தாயிரம் சேமிக்க முடியும், அடுத்த 35 வருசம் சேமிக்க முடியும் , நடுவில் பணம் எடுக்க வேண்டிய சாத்தியங்கள் கம்மி – இப்படி தெளிவாகச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன சரியா வரும்னு சொல்ல முடியும். இப்ப கையில் 25 லட்ச ரூபாய் இருக்கு அடுத்த ஆண்டே பிள்ளைகளின் படிப்புக்கோ திருமணத்துக்கோ தேவைப்படும் என்று இருந்தால் அவர் பங்குச் சந்தைக்குள் பணத்தை போடாமல் இருப்பதே நல்லது. குறுகிய காலத் திட்டம் பங்குச் சந்தைக்கு உகந்ததல்ல.

கேள்விக்கெலலாம்  பதில் தயார் செஞ்சாச்சு, அடுத்து என்ன செய்யலாம். பங்குச் சந்தை குறித்து போதுமான அறிவு இருந்தால் நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். அப்படி இல்லாதோர் ம்யூச்சுவல் ஃபண்ட்களை நாடுவதே நலம்.

அப்படி ம்யூச்சுவல் ஃபண்ட்களில் போட முடிவு செய்தாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் ஃபண்ட்களில் எதில் போடுவது என்று முடிவு செய்வது கடினம்.

ஈக்விட் ஃபண்ட், பாண்ட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஸ்பெசாலிட்டி ஃபண்ட், செக்டார் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் என்று நிறைய இருக்கு. ஈக்விடிக்குள் லார்ஸ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என்று கேட்டாலே தலையை சுத்தும் நிறைய பேருக்கு.

நேரடி பங்குச் சந்தை முதலீடோ அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடோ எதுவா இருந்தாலும் செய்ய வேண்டியவை

  • இதை ஏன் சீரோன்னு சொல்றேன்னா, அது சேமிப்புக்கு முன்னர் செய்ய வேண்டியது. ஆண்டு வருமானத்துக்கு 10 மடங்கு ப்யூர் லைஃப் இன்சூரன்ஸ் வாங்குங்க.
  • மேலே சொன்ன Purpose, Goal etc முடிவு செய்யுங்க
  • முதலீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், ரிஸ்க் இவை குறித்து படிங்க
  • கையில் இருக்கும் பணம் மொத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தையில் போடாதீங்க. குறிப்பிட்ட கால இடைவெளியில் 10 முறையோ 20 முறையோ முதலீடு செய்யுங்க
  • எப்பேர்பட்ட முதலீடா இருந்தாலும் மொத்த சேமிப்பையும் ஒரே திட்டத்தில் போடாதீங்க
  • சேமிப்பை மூன்றாக பிரித்துக் கொள்ளுங்கள். ஈக்விட்டி, பாண்ட் / Debt மற்றும் அவசரத்தேவைக்கு கையிருப்பு
  • அவசரத்தேவைக்கு மாச சம்பளத்தின் 1-2 மடங்கு இருக்கட்டும்
  • ஈக்விட்டி / பாண்ட் பிரிப்பதற்கு வழிமுறை ஒன்றைச் சொல்வாங்க – நூறிலிருந்து உங்க வயசைக் கழிச்சா வரும் விடை ஈக்விட்டியில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம், மிச்சம் பாண்ட். 30 வயசானவர் 70% ஈக்விட்டியிலும் 30 % பாண்டிலும் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். வயசு ஆக ஆக ஈக்விட்டியை குறைத்து பாண்டை அதிமாக்கணும். ரிட்டையர் ஆகும் போது அதிக ரிஸ்க் எடுக்க முடியாது, அப்புறம் நெறைய பாண்ட் போன்ற relatively safe முதலீட்டிலும் கம்மியா ஈக்விட்டியிலும் வைக்கணும்
  • குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரீபேலன்சிங் செய்யணும்
  • பங்குச் சந்தை குறித்து போதிய அறிவும் சந்தையில் செலவிட நேரமும் இல்லாதவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் துணையைப் பெருவது நல்லது.

முதலீட்டு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

உடல் நலம் காக்கும் மருத்துவரை எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித்தான்.  நீங்க ஃபீஸ் ஏதும் கொடுக்க வேண்டாம், மருந்து கம்பெனிகளிடம் கமிசன் வாங்கிக்கறேன்னு ஒரு டாக்டர் சொன்னா அவரிடம் போவோமா? ஒரே மருந்தை நூறு கம்பெனிகள் தயாரிக்கின்றன, எந்த கம்பெனி அதிக கமிசன் தருதோ அவங்க மாத்திரையைத்தானே அவர் பரிந்துரை செய்வார். கம்பனி அதையும் நம்ம கிட்டதான் வசூல் செய்யும். அதே லாஜிக்தான் முதலீட்டு ஆலோசகர்களுக்கும். அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் “Fee Only”  Advisors இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. வாடிக்கையாளர் தரும் 0.5 – 1 % மட்டுமே இவர்களின் வருமானம். இவர்கள் பரிந்துரைக்கும் ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து இவர்கள் கமிசன் ஏதும் பெறக்கூடாது. இப்படி இருந்தால் அவர் பாரபட்சமின்றி நல்ல முதலீடுகளை நமக்குக் காட்டுவார்கள்.

எப்படி டாக்டர், வக்கீல், இஞ்சினியருக்கு ஃபீஸ் கொடுத்து கன்சல்டேசன் பெருகிறோமோ அப்படி முதலீட்டு ஆலோசகர்ளுக்கும் கொடுத்தால்தான் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்

லாபத்தில் பங்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதிலிருக்கும் ரிஸ்க் – அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆலோசகர்கள் ரிஸ்க் அதிகமான முதலீடுகளை பரிந்துரைக்கும் வாய்ப்பு இருப்பதால் அது உசிதமல்ல.

ம்யூச்சுவல் ஃப்ண்டில் போடறதா இருந்தா www.valueresearchonline.com போன்ற வெப்சைட்களில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், பாண்ட் இவற்றில் டாப் 10 ஃபண்ட்கள் குறித்து பாத்துட்டு போங்க, இவை தவிர ஆலோசகர் வேறு ஃபண்ட்களை பரிந்துரை செய்தால், காரணம் கேளுங்க, அந்த ஃபண்ட் டாப் 10 ஃபண்ட்களை விட எந்த விதத்தில் சிறந்தது என்று கேளுங்க. பதில் திருப்தியா இருந்தால் அதில் முதலீடு செய்யுங்க. சில டாக்டர்கள் நான் டாக்டரா நீயான்னு கேக்கறா மாதிரி கேட்டா ஆலோசகரை மாத்திடுங்க.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ், எனக்கு சிம்பிளா 3-4 ஃபண்ட் சொல்லுங்க, அதில் பணம் போடறேன்னு சொல்றவரா நீங்க? உங்களுக்கென உருவானதுதான் Robo Investing என்கிற கான்செப்ட். ரோபோ இன்வெஸ்டிங் தளங்களில் நீங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சா, வயசு, முதலீடு செய்ய இருக்கும் தொகை, காலம், உங்க risk appetite ஒரு சில அடிப்படை கேள்விகள் கேக்கும். பதில்களை வைத்து அதில் உள்ள அல்கோரிதம் உங்களுக்கென ஒரு ப்ரத்யேக போர்ட்ஃபோலியோ கொடுக்கும், அது எவ்வளவு ப்ரத்யேகம்னா, உலகில் உள்ள எல்லா மகர ராசிகாரர்களும் ஒரே பலன் சொல்றது எவ்வள்வு ப்ரத்யேகமோ அந்த அளவுக்குத்தான் இதுவும். அது சொல்லும் ஃப்ண்ட்களில் பணம் போட எழுதிக் கொடுத்தா மாதா மாதம் உங்க வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து அதுவே முதலீடு செய்து விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதுவே ரீ பேலன்சிங் செய்து விடும். அமெரிக்காவில் Betterment, Wealthsimple, Wealth Front என நிறைய ரோபோ பேலன்சிங் தளங்கள் உள்ளன. இவர்கள் 0.25% முதல் 0.5% வரை ஃபீஸ் வாங்குகிறார்கள்.

இந்தியாவில் இந்த கான்செப்ட் இன்னும் சூடு பிடிக்க வில்லை, www.wealthy.in, www.goalwise.com போன்றோர் ரோபோ இன்வெஸ்டிங் சேவை அளிக்கின்றனர். இவற்றில் பிரச்சனை மேலே சொன்ன ஃபீஸ் வாங்கும் வழிதான். நம்மிடம் ஃபீஸ் வாங்காமல், ம்யூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிடமிருந்து கமிசன் பெறுகின்றனர். இந்நிலை மாறும் போது இன்னும் நல்ல ஃபண்ட்களை இவர்கள் பரிந்துரை செய்வார்கள் என நம்பலாம்.

தற்போது இந்தியாவில் உள்ள ம்யூச்சுவல் ஃபண்ட்கள் 2-3 % அளவுக்கு மிக அதிக கட்டணம் வசூலிக்க இதுவும் ஒரு காரணம். அமெரிக்காவில் வேன்கார்ட், ஃபிடெலிடி நிறுவனங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட்கள் 0.3% முதல் 0.9% வரையிலும் actively managed funds 0.5% முதல் 1% வரையிலும் கட்டணம் பெற்று வருகின்றன. இந்த அளவுக்கு குறையலேன்னாலும் இந்தியாவில் இப்ப இருக்கும் கட்டணங்கள் பாதி அளவுக்காவது குறையணும். 

எல்லாம் சொல்லிட்டு என்னிக்கு முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்னு சொல்லணும் இல்லையா? முதலீடு செய்ய ஆரம்பிக்க உகந்த நாள் “இன்று”. நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே உங்க ஓய்வு கால திட்டமிடுதலைத் தொடங்குங்க

முதலீட்டில் கடன் பத்திரங்களின் (Bonds) முக்கியத்துவம்

Image result for investment bond pictures

நாணயம் விகடனில் வந்த என் கட்டுரை

பணம் சம்பாதிக்க நிறுவனங்களின் பங்குகளில் (Stocks) முதலீடு செய்

பங்குகளில் சம்பாதித்த பணத்தை பாதுகாக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய் என்று பங்குச் சந்தையில் ஒரு சொலவடை உண்டு

படிக்கும் போது முரணாகத் தோன்றினாலும் சிறு / குறு முதலீட்டார்கள் முதல் முதலீட்டு நிறுவனங்கள் வரை அனைவரின் முதலீட்டுத் தொகுப்பிலும் (Portfolio) இருக்க வேண்டியது கடன் பத்திரங்கள் (Bonds). அவை போர்ட்ஃபோலியோவுக்கு ஸ்திரத்தன்மை வழங்கக் கூடியவை.

ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிப்பவர்கள், செய்யும் நூறு ரூபாய் முதலீட்டில் அவர் வயது என்னவோ அவ்வளவு சதவீதம் பாண்டிகளிலும் மிச்சத்தை ஷேர்களிமும் முதலீடு செய்ய வேண்டும் எனபது பொருளாதார நிபுணர்களின் பரிந்துரை. வயது அதிகமாவது போல் போர்ட்ஃபோலியோவில் பாண்ட்களின் சதவிகிதமும் அதிகாகிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு நாட்டில் வட்டி விகிதம் அதிகமாகும் போது பாண்ட்களின் மவுசு குறையும், வட்டி விகிதம் குறையும் போது பாண்ட்களின் மவுசு அதிகமாகும். இந்தியாவில் வட்டிவிகிதம்  குறைந்து கொண்டு வரும் இப்போது பாண்ட்கள் நல்ல  வளர்ச்சி காண்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் யூடிஐ நிறுவனத்தின் கில்ட் அட்வாண்டேஜ் நிதி 11.3% வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்டேட் பாங்க், ஃப்ரான்க்ளின் டெம்பிள்டன் போன்ற நிறுவங்களின் நிதிகள் 10.5 % வளர்ந்துள்ளன. வங்கிகள் தரும் 6-7% வட்டியை விட இவை அதிகம்.  முன்பு வட்டி அதிகமா இருந்த போது வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள் இப்போது After Market இல் நல்ல விலைக்கு வாங்கி விற்கப்படுகின்றன. இந்தியாவில் இன்னும் சில வருடங்களுக்கு வட்டி விகிதம் குறையவே வாய்ப்பு அதிகம், எனவே பாண்ட்களின் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்ட அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமாகி வந்தாலும் பாண்ட்களில் முதலீடு செய்ய வேண்டிய தருணமிது.

அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்ற நவம்பர் 2017 இல் 18,250 ஆக இருந்த டௌ ஜோன்ஸ் (அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடுகளில் ஒன்று) பத்தே மாதங்களில் 22,349 புள்ளிகளை எட்டியுள்ளது. அதாவது பத்து மாதங்களில் 22.5 % வளர்ச்சி. இப்போது அமெரிக்கப் பங்குச் சந்தையில் மூதலீடு செய்பவர் தன்னை ரிட்டையர்மெண்ட் எனும் ஊருக்குச் செல்லும் போர்ட்ஃபோலியோ எனும் தண்டவாளத்தில் செல்லும் ட்ரெயினை ஓட்டுபவர் போல யோசிக்க வேண்டும். வண்டியின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே அடைந்து விடுவோம் என்று விட்டு விட முடியாது. ஒரு நேரத்தில் வேகம் மிக அதிகமாக ஆகி வண்டி தண்டவாளத்தை விட்டு இறங்கி விபத்து நேர வாய்ப்புண்டு. இப்போது அவர் “பாண்ட்ஸ்” எனும் ப்ரேக்கை உபயோகித்து வண்டிக்கு ஒரு ஸ்திரத்தன்மையை தர வேண்டும். அப்போதுதான் வளைவில் ஏதோ ஒரு தடங்கல் வந்தால் ட்ரெயினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ஓயூவூதியத்துக்கு போர்ட்ஃபோலியோவிலிந்து ஆண்டுக்கு 5% எடுத்து செலவு பண்ண நினைப்பவர்களுக்கு பாண்ட் அதி முக்கியம். ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் போது ஷேர்களை வாங்க வேண்டுமே தவிர விற்கக் கூடாது. ஒருவர் 1000 ரூபாய்க்கு வாங்கிய பங்கு வீழ்ச்சி காலத்தில் 500 ருபாய்க்கு போக வாய்புண்டு. அப்ப அவர் மாச செலவு 50,000 ரூபாய்க்கு 50 ஷேர் விக்கறதுக்கு பதில் 100 ஷேர் விக்க வேண்டியிருக்கும். வீழ்ச்சி முடிந்து வளர்ச்சி காலம் வரை காத்திருந்தால், 50 ஷேருக்கே 50,000 ரூபாய கிடைக்க வாய்ப்புண்டு. இந்த மாதிரி நேரங்களில் ஷேர்களை விற்காமல் அதிக ஏற்ற இறக்கங்கள் அற்ற பாண்ட்கள் உறுதுணையாக இருக்கும்

ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடையும் காலகட்டங்களில் போர்ட்ஃபோலியோவின் வீழ்ச்சியைக் குறைக்க பாண்ட்கள் அவசியம்.

கடன் பத்திரங்கள் (பாண்ட்) வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டையும் கட்டுப்படுத்தி முதலீட்டுத் திட்டத்தை ஒரு நேர்கோட்டில் வைத்திருக்க பெருமளவு உதவும். அதுக்காக பாண்ட்களின் வளர்ச்சி ரொம்ப கம்மி என்று நினைக்க வேண்டாம்.

அமெரிக்க பங்குச்சந்தை  வரலாற்றிலேயே மிக மோசமான ஆண்டுகள் 1970ம் 2008ம். 1970இல் ஷேர் மார்க்கெட் இழந்தது 22.6%, 2008இல் இன்னும் மோசம் நாஸ்டாக் 41.7% வீழ்ந்தது. அதாவது டிசம்பர் 31, 2007ம் ஆண்டு ஒரு லட்சம் டாலராக இருந்த போர்ட்ஃபோலியோ டிசம்பர் 31, 2108 அன்று 58,000 டாலராக ஆகியிருந்தது. 1970ம் ஆண்டு பாண்ட் மார்க்கெட் 6.5% ரிட்டர்ன்ஸ் கொடுத்தது, 2008ம் ஆண்டு ஏழு சதவீதத்துக்கும் அதிகமாக ரிட்டன்ஸ் தந்தது. இதே ஆண்டுகளில் ஷேர்களில் 50 சதவீதமும் பாண்டில் 50 சதவீதமும் வைத்திருந்த போர்ட்ஃபோலியோ எப்படி செயல்பட்டது தெரியுமா? 1974 ஆண்டு நட்டத்தை 22.6 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதத்துக்கு குறைத்திருக்கும். 2008ம் ஆண்டு 41% நட்டத்துக்கு பதிலா 19.9% நட்டம் மட்டுமே கண்டிருக்கும்.  இப்ப புரிஞ்சிருக்கும் கடின காலங்களில் பாண்ட்களின் முக்கியத்துவம் என்னன்னு. 

வரிசேமிக்கவும் பாண்ட்கள் உள்ளன. Tax Free Bond and Tax Savings Bond என ரெண்டு வகை வரிசேமிப்பு பாண்ட்கள் இந்தியாவில் உள்ளன. வரிகட்டிய பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் போடறதுக்கு பதில் டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்களில் முதலீடு செய்யலாம், இதில் வரும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. வைப்பு நிதிக்கு 7% வட்டி வழங்கும் எச் டி எஃப் சி வங்கி டாக்ஸ் ஃப்ரீ பாண்டுக்கு 8% வட்டி வழங்குகிறது. டாக்ஸ் சேவிங் பாண்ட்களில் வட்டிக்கு வரிவிலக்கு செக்சன் 80cc யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 20,000 வரை உண்டு ஆனால் முதலீடுக்க்கு வருமான வரி விலக்கு உண்டு. இவை பெரும்பாலும் நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்க அரசு நிறுவனங்கள் வழங்கும் Infrastructure Bonds. ஒருவர் 2007 ஆண்டு ஒரு நிலத்தை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி 2017 இல் அம்பது லட்ச ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். லாபம் 40 லட்ச ரூபாய், இதுல இண்டக்சேசன் போக ஒரு 20 லட்ச ரூபாய் நிகரலாபம். இதுக்கு  நீண்ட கால மூலதன ஆதாய வரி (Longterm capital gain) கட்டறதுக்கு பதிலா NHAI / REC போன்ற நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் செக்சன் 54 EC யின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்

இனி உங்க போர்ட்ஃபோலியோவில் பாண்ட்களும் இருக்கும்தானே !!!

பங்குச் சந்தையும் பொறுமையும்

https://www.youtube.com/watch?v=_aSngISnKwQ

ரவி என்பவரின் தாத்தா 1990ம் ஆண்டு எம் ஆர் எஃப் நிறுவனத்தின் 20,000 ஷேர்களை வாங்கியிருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக முடக்குவாத்தில் முடங்கியிருந்த அவர் இப்போது கொஞ்சம் உடல் நலம் தேறியதும் இது குறித்து ரவியிடம் சொல்லி அந்த ஷேர் சர்ட்டிஃபிகேட்டை ரவிக்கு கொடுத்திருக்கிறார்.

2001 ஆண்டு 500 ரூபாய்க்கு எம் ஆர் எஃப் ஷேர் விற்றது. 1990 ஆண்டில் இவர் இதை 100 ரூபாய் அளவுக்கு வாங்கியிருப்பார் என நினைக்கிறேன்.. 27 ஆண்டுகளுக்கு முன் ரெண்டு லட்ச ருபாய் முதலீடு செய்து காத்திருந்ததின் பலன் இப்போ அதன் மதிப்பு 130 கோடி ரூபாய்.

கோமா வந்து வீட்டில் நினைவில்லாமல் இருந்தாலும் பெருகிக்கொண்டே போகும் நல்ல பங்குகளில் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம் அல்லது ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம் என்று கூறி 6% வட்டிக்கு ஃபிக்சட் டெபாசிட் போடலாம்.. சாய்ஸ் உங்க கையில்

Diversification

Image result for diversification pictures

ஒருத்தரோட முதலீட்டுத் தொகுப்பு (Investment Portfolio) பத்தி பேசுற வாய்ப்பு வந்தது. அவர் தான் முதலீடு செய்யும் ஒரே ஒரு ஃபண்ட் பேர் சொன்னார். ஓரளவுக்கு நல்லா செயல் படக்கூடிய ஃபண்ட் ஆனா அது ஒரு மிட் கேப் ஃபண்ட். ஏங்க எல்லாத்தையும் ஈக்விட்டியிலேயே அதுவும் மிட்கேப்ல போடறீங்கன்னு கேட்டேன். நான் ரிஸ்க் எடுக்ககூடியவன் என்றார். இதுக்கு பதிலா அந்த பணத்துக்கு லாட்டரி சீட்டு வாங்கலாம்.

நம்மில் இப்படித்தான் பல பேர் அவர் சொன்னார், இவர் சொன்னார்னு ஏதோ ஒரு ஃபண்ட் செலக்ட் பண்ணி அதுல எல்லா பணத்தையும் போட்டுட்டு அப்புறம் மார்க்கெட் மேல குத்தம் சொல்றோம்.

முதலீடு, பங்குச் சந்தை எல்லாம் ராக்கட் சயன்ஸ் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டா யார் வேணா கத்துக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்ட் செலக்ட் பண்றதுக்கு வேல்யூரிசர்ச் ஆன்லைன், மணிகண்ட்ரோல் மாதிரி வெப்சைட்களில் ஒரு வாரம் ஒக்காந்தா கத்துக்கலாம்.

பால பாடம்னு ஒன்ணு இருக்கு அது மட்டும் எல்லாருக்கும் பொருந்தும். Don’t put all your eggs in one basket இது முதலீட்டுத் தொகுப்புக்குன்னே உருவானதுன்னு நினைக்கிறேன். முதலீடு செய்யும் நூறு சதவிகிதத்தில் உங்க வயசுக்கு ஈடான சதவீதம் பாண்ட்களில் இருக்கட்டும். மிச்சம் ஈக்விடிக்கு. வயசு முப்பதுன்னா 25-30 %பாண்ட் ஃபண்டிலும் 70-75% ஈக்விட்டியிலும் இருக்கட்டும்.

அதுக்கப்புறம் ஈக்விட்டி பங்கை குறைந்த பட்சமாக லார்ஜ் கேப், மிட்கேப் என்று இரண்டிலாவது போடுங்க. ஸ்பெசியாலிட்டி ஃபண்ட், இண்டர்நேசன்ல ஃபண்ட், செக்டார் ஃபண்ட் இவற்றுக்கெல்லாம் போகலேன்னா கூட பரவாயில்லை – லார்ஜ்கேப் மற்றும் மிட் அல்லது ஸ்மால் கேப் என்று ரெண்டு திட்டத்திலாவது முதலீடு செய்யுங்க.

மார்க்கெட் ஏறும் போது முழுசும் ஈக்விட்டியில் இருக்கும் போர்ட்ஃபோலியோ நல்லா இருக்கறா மாதிரி இருக்கும். மார்க்கெட் சரியும் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். சீட் பெல்ட் விபத்து நடக்காமல் இருக்க உதவாமல் இருக்கலாம், விபத்து நடக்கும் போது உயிர் போகாமல் இருக்க உதவும். டைவர்சிஃபிகேசன் பெரிய / சின்ன போர்ட்ஃபோலியோ எல்லாத்துக்கும் அவசியம்

முதலீடு, பங்குச் சந்தை எல்லாம் ராக்கெட் சயன்ஸ் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டா யார் வேணா கத்துக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்ட் செலக்ட் பண்றதுக்கு வேல்யூரிசர்ச் ஆன்லைன், மணிகண்ட்ரோல் மாதிரி வெப்சைட்களில் ஒரு வாரம் ஒக்காந்தா கத்துக்கலாம்.