HDFC Life தற்போது ப்ரமோட் செய்யும் கேரண்டீட் இன்கம் ப்ளான் Sanchay Plus.
ஏற்கெனவே சஞ்சய் இருந்த போது அது குறித்து எழுதியிருக்கிறேன். இம்முறை சென்னை விஜயத்தில் சஞ்சய் ப்ளஸ் குறித்து வங்கியில் நச்சரித்ததால் ப்ளஸ்
இதில் 4 தெரிவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
- Guaranteed Maturity 10 வருடங்கள் பணம் கட்டினால் 20ம் ஆண்டு முடிவில் மொத்தத் தொகை கிடைக்கும்
- Guaranteed Income 12 ஆண்டுகள் பணம் கட்டினால், ஒராண்டு கழித்து 14ம் ஆண்டு முதல் 25ம் ஆண்டு வரை (12 ஆண்டுகள்) ஆண்டுக்கொருமுறை பணம் கிடைக்கும்
- Long Term Income : 10 ஆண்டுகள் பணம் கட்டினால், ஒராண்டு கழித்து 12ம் ஆண்டு முதல் 36ம் ஆண்டு வரை (25 ஆண்டுகள்) ஆண்டுக்கொருமுறை பணம் கிடைக்கும். 36ம் ஆண்டு ஒரு LumpSum முதிர்வுத் தொகையும் கிடைக்கும்
- Life Long Income 10 ஆண்டுகள் பணம் கட்டினால், ஒராண்டு கழித்து 12ம் ஆண்டு முதல் 99 வயது வரை ஆண்டுக்கொருமுறை பணம் கிடைக்கும். இறுதியில் ஒரு LumpSum முதிர்வுத் தொகையும் கிடைக்கும்
HDFC Life இன் இணைய தளத்தில் உள்ள உதாரணத்தையே கணக்குக்கு எடுத்துக் கொண்டேன்.
30 வயதாகும் ஒரு ஆண் திட்டத்தில் சேருகிறார். ஆண்டு ப்ரீமியம் 1 லட்ச ரூபாய் மற்றும் வரிகள்.
- பத்தாண்டுகள் பணம் கட்டினால் அவருக்கு 20ம் ஆண்டு முடிவில் கிடைப்பது 2,206,300 ரூபாய்கள்
- 12 ஆண்டுகள் பணம் கட்டினால் 14ம் ஆண்டிலிருந்து 25ம் ஆண்டு வரை (12 ஆண்டுகள்) ஒவ்வொரு ஆண்டும் 2,09,000 ரூபாய்கள் கிடைக்கும்.
முதலாம் ஆண்டு கட்டும் 1 லட்ச ரூபாய் 5% அளவில் வளர்ந்தால், 20 ஆண்டுகள் முடிவில் கையிருப்பு 265,329 ரூபாய், 2ம் ஆண்டு கட்டும் 1லட்ச ரூபாய் 20 ம் ஆண்டு முடிவில் 252695 ரூபாய். இப்படியே 10 ஆண்டுகளும் கட்டும் பணம் 20 ஆண்டு முடிவில் 21,51,256 ஆக இருக்கும். இங்கு நான் வரிகளை கணக்கில் எடுக்கவில்லை. எடுத்தால் இத்தொகை எச் டி எஃப் சி தரும் 2,206,300 ரூபாயைத் தாண்டிவிடும்.
அதாவது HDFC Life இன் Sanchay Plus தருவது 5% வளர்ச்சி மட்டுமே. எச் டி எஃப் சி வங்கி தற்போது 10 ஆண்டு தொடர் வைப்பு நிதி (ரெக்கரிங் டெபாசிட்)க்கு 7% வட்டி வழங்குகிறது. இதே பணத்தை 12 மாதங்களாக்கி மாதம் 8333 ரூபாய் எச் டி எஃப் சியில் கட்டினால் 10 ஆண்டுகள் முடிவில் உங்க கையில் 14,42,373 ரூபாய்கள் இருக்கும். 10 ஆண்டுகள் கழித்து 7% வட்டி இருப்பது சந்தேகம். அடுத்த 10 ஆண்டுகள் 5% அளவில் வளர்ச்சி இருந்தாலும் இப்பணம் 23.5 லட்சமாக ஆகியிருக்கும்.
இரண்டாவது ஆப்சனுக்கும் இதே மாதிரி கணக்குப் போட்டுபார்த்தால் 12ம் ஆண்டு முடிவில் 24,69,269 ரூபாய் இருக்கும். அடுத்த ஆண்டு பணம் கிடைக்காது, அதுக்கு 5% வளர்ச்சி போட்டால் அது 25,92,732 ரூபாய் இருக்கும். எச் டி எஃப் சி தருவதோ ஆண்டுக்கு 209,000 வீதம் 12 ஆண்டுகள். இது முதல் தெரிவை விட மோசம்.
20 ஆண்டுகள் நீண்டகாலம் காத்திருந்து 5% வளர்ச்சி கூட பெறும் வழிதெரியாதவர்கள் தாராளமாக இத்திட்டத்தில் சேரலாம்.
விற்பனையாளர்கள் இத்திட்டத்தில் இருக்கும் வேறு இரண்டு பயன்கள் பற்றி சொல்வாங்க
- ஆயுள் காப்பீடு : மேலே சொன்ன உதாரணத்துக்கு 12.5 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் கட்டக்கூடிய 30 வயது உடையவருக்கு இக்காப்பீடு போதவே போதாது. 10 லட்ச ரூபாய் சம்பாதித்தால் தான் 1 லட்சம் இதில் முதலீடு செய்ய முடியும். அவருக்கு 1-2 கோடி ஆயுள் காப்பீடு தேவை, அதை டெர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்
- வரி விலக்கு : கட்டும் பணத்துக்கு 80 சியில் வரி விலக்கு உண்டு. 80சியின் உச்ச வரம்பே 1.5 லட்சம் தான். அதுக்கு இதிலேருந்து 1 லட்சம் போக வாய்ப்பு மிகக் குறைவு. வருமான வரி விலக்கு தேவைப்படுவோர் இ எல் எஸ் எஸ் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களை நாடுதல் நலம்