ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு குறித்து தமிழில் பேசும் தளம். I am not a professional financial advisor – certified or otherwise The purpose of articles written here is purely educational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals and Invest as you see fit or consult a Professional Financial Advisor before investing
இது எல் ஐ சியின் ஜீவன் உமங்கின் விளம்பரம். இதில் gross investment return @8 % என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் கொடுக்கப் பட்டிருக்கும் ரிட்டர்ன்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கணக்கு போட்டுப் பார்த்து விட்டேன் எப்படி பாத்த்தாலும் 8% ரிட்டர்ன்ஸ் வரவே மாட்டேங்குது..
100 நூறு வயசு ஆனப்புறமும் வாழ்ந்தா மெச்சூரிட்டி பணம் 1.66 கோடி ரூவா கிடைக்குமாம், ஒரு வேளை அதையும் சேத்து சொல்றாங்களோ என்னவோ தெரியல.
எனக்குத் தெரிஞ்சு ஜீவன் உமங் ப்ரீமியம் கட்டும் காலத்துக்குப் பிறகு சம் அஷ்யூர்டின் 8% (கட்டிய தொகையின் அல்ல சம் அஷ்யூர்டின் 8%) பென்சன் போல வழங்கும். இதில் குறிப்பிட்டு இருப்பதோ gross investment return @8 % , என்னுடைய ஆங்கில அறிவு வெரி லிமிடட், எனக்கு தெரிந்த வரையில் இதன் அர்த்தம் போட்ட பணத்துக்கு 8% என்பதேயாகும். எனக்குத் தெரிஞ்ச கொஞ்சூண்டு எக்சல் அறிவை வச்சி கணக்குப் போட்டால் 8% வரவே மாட்டேங்குது.
எல் ஐ சி தரப்பிலிருந்து யாராவது எப்படி 8% கிடைக்கும்னு சொன்னால், நானும் இதில் முதலீடு செய்யலாம்னு இருக்கேன். சொல்வாங்களான்னு பாக்கலாம்
இது ஒரு Whole Life வகை பாலிசி.. இந்த பாலிசி குறித்து பாக்கறதுக்கு முன்ன ஹோல் லைஃப்னா என்னான்னு கொஞ்சம் பாக்கலாம்
டெர்ம் பாலிசி எடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுப்போம். உதாரணத்துக்கு 35 வயசு ஆன ஒருவர் டெர்ம் பாலிசி எடுத்தார்னா 25-30 வருடங்களுக்கு எடுப்பது உத்தமம் ஏன்னா அவர் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் காலத்தில் இறக்க நேரிட்டால் அவர் குடும்பத்துக்கு பாலிசி அமவுண்ட் income replacement ஆக இருக்கும். காப்பீடு முதிர்வடையும் வரை அவர் இறக்கலேன்னா, அவருக்கோ குடும்பத்துக்கோ எதுவும் கிடைக்காது. ஹோல் லைஃப் பேருக்கேத்தா மாதிரி ஆயுட்காலம் முழுவதற்குமான காப்பீடு
சாகும் வரை உண்ணாவிரதம் வேணா இருக்கலாம், சாகும் வரை காப்பிட்டுன்னு சொன்னா முடிவில்லாம இருக்கும் அதனால் பொதுவா ஹோல் லைஃப் பாலிசிகள் சந்தாதாரருக்கு 100 வயது ஆகும் வரை என்று நிர்ணயிக்கப் படுகிறன. இன்றைய தேதியில் நூத்துக்கு 99 பேர் அதுக்கு முன்ன இறந்துடுவாங்க, அதனால் இதை ஹோல் லைஃப் என்று சொல்லலாம்.
இதில் ப்ரீமியம் கட்டும் காலம் என்று இருக்கும். பாலிசி எடுத்ததுலேருந்து 10-15-20 வருடங்களுக்கு ப்ரீமியம் கட்டினால் போதும். அக்காலம் முடியும் போது ஒரு தொகை கிடைக்கும் அப்போலேருந்து எடுத்தவருக்கு 100 வயசு ஆகும் வரை ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். 100 வயசு வரைக்கும் இருந்தால் மீண்டும் ஒரு தொகை கிடைக்கும் அதுக்குள்ள அவர் இறந்து விட்டால் நாமினிக்கு பாலிசி தொகையும் போனஸும் கிடைக்கும்..
இது நல்லாத்தானே இருக்கு அப்படீங்கறீங்களா? பொதுவா ஹோல் லைஃப் பாலிசியிலும் குறிப்பா ஜீவன் தரங்கிலும் உள்ள பிரச்சனைகளைச் சொல்றேன்1. ஆயுள் காப்பீட்டின் அடிப்படையே income replacement தான், அதாவது ஒருத்தர் சம்பாதிக்கும் போது குடும்பம் அவர் சம்பளத்துக்கு ஏத்த லைஃப் ஸ்டைல் ஏற்படுத்தியிருப்பாங்க. திடீரென அவர் இறக்க நேரிட்டால், குடும்பம் அந்த லைஃப் ஸ்டைலை தொடர பணம் தருவது ஆயுள் காப்பீடு. ஹோல் லைஃப் இதுக்கு எதிரானது. ரிட்டையர் ஆன ஒருவருக்கு ஆயுள் காப்பீடு தேவையே இல்லை. 60 வயதில் முடியும் ஒரு பாலிசி எடுப்பதற்கும் 100 வயசில் முடியும் ஒரு பாலிசி எடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு ப்ரீமியம்ல. chances of someone dying at 80 or 90 is much higher than him dying at 60, hence the premium will be much higher
2. ப்ரீமியம் அதிகமாவதால், சந்தாதாரரால் அவருக்குத் தேவையான அளவு காப்பீடு எடுக்க முடியாது. உதாரணத்துக்கு ஒருத்தர் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், குடும்பம் மாசம் 40,000 ரூபாய்க்கான செலவுகளை ப்ளான் பண்ணிடுவாங்க. அவர் திடீர்னு இறந்து விட்டால், குடும்பம் ஓரளவு சமாளிக்க 50 லட்ச ரூபாயாவது வேண்டும். அது இருந்தால்தான் அக்குடும்பம் பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து 25ஆயிரம் ரூபாயாவது வர்ற மாதிரி ஏற்பாடு செய்ய முடியும். anything less than 10 times your annual salary will be inadequate, இந்த அளவு ஹோல் லைஃப் எடுக்க ரொம்ப செலவாகும்.
3. ஹோல் லைஃப்பில் மெச்சூரிட்டி பெனிஃபிட் என்பதே அர்த்தமில்லாதது. ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே 100 வயது வரை வாழ்ந்து அதை பெறுவார்கள். 99% க்கும் அதிகமானோர் அதை வாங்காமலே இறந்து விடுவார்கள். which means, there is no liquidity in this plan. Premium paying period க்கு அப்புறம் சிறு தொகை ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் ஆனா ஒரு பெரிய தொகை உயிருடன் இருக்கும் போது கிடைக்காது. மருத்துவச் செலவுக்கோ பிள்ளைகள் திருமணத்துக்கோ வேணும்னா கிடைக்காது
இப்ப ஜீவன் தரங்குக்கு வருவோம்
ரமேஷுக்கு வயது 35, புகை பிடிக்கும் பழக்கமில்லை. 20 ஆண்டுகாலம் ப்ரீமியம் செலுத்தத் தயார், அவர் சம்பளம் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய், அவர் 50 லட்ச ரூபாய்க்கு தரங் பாலிசி எடுக்க விரும்புகிறார். அவரோட ப்ரீமியம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 2,52,350 ரூ மற்றும் வரிகள் மொத்தம் 2,82,00 ரூபாய்க்கு மேல வரும். அஞ்சு லட்சம் சம்பாதிப்பவரால் இவ்வளவு கட்டவே முடியாது. ஒண்ணு அவர் சம்பளத்தில் பாதிய காப்பீடுக்கு கட்டணும் அல்லது தேவைக்கு குறைவாக காப்பீடு எடுக்கணும். Bottomline இது காப்பீட்டுக்கு லாயக்கில்லை
சரி காப்பிட்டுக்குத்தான் லாயக்கில்லை, முதலீடாக நல்லா இருக்கான்னு பாக்கலாம்.
ஆண்டுக்கு 2,82,000 ரூ வீதம் 20 ஆண்டுகளுக்கு கட்டின பிறகு ரமேஷுக்கு 20 லட்சம் முதல் 64 லட்சம் ரூ வரை கிடைக்கும். கண்டிப்பா இவ்வளவு கிடைக்கும்னு சொல்ல முடியாது. அதுக்கப்புறம் ரமேஷுக்கு 100 வயது ஆகும் வரை ஆண்டுக்கு 2,75,000 கிடைக்கும். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இது ரொம்ப கம்மி என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ரமேஷ் இந்த பாலிசிக்கு பதிலா என்ன செய்யலாம்னு பாக்கலாம்.
இதே 50 லட்ச ரூபாய்க்கு எல் ஐ சியின் நல்ல திட்டமான இடெர்ம் பாலிசி எடுத்தால் ப்ரீயம் ஆண்டுக்கு வெறும் 12,000 ரூபாய் மட்டுமே. மிச்சம் இருப்பது 270,000 ரூபாய். அதாவது மாசத்துக்கு 22500 ரூபாய். இதை அவர் வேறு நல்ல Equity & Bond fund களில் போடலாம்.
அவரோட முதலீடு ஆண்டுக்கு 5% (as against Tarang’s scenario 1 which is Rs40,000 per lakh) or 10% (as against Tarang’s Scenario 2 which is Rs 128,000 per lakh) வளருதுன்னு வச்சி கணக்கு பண்ணிப் பாக்கலாம். see excel
இடெர்ம் பாலிசி எடுத்தப்புறம் மிச்ச பணத்தை முதலீடு பண்ணிட்டு வந்தால், ரமேஷிடம் 90 லட்சம் முதல் 1.7 கோடி வரை இருக்கும் (வளர்ச்சியைப் பொருத்து) இது தரங் தரக்கூடிய தொகையை விட மிக அதிகம். மேலும் இந்தப் பணத்தை முதலீடு செய்து வைத்தால் ஆண்டு தோறும் கிடைக்கும் தொகையும் தரங் தரக்கூடிய தொகையை விட அதிகம்
இவ்வகை சேமிப்பில் லிக்விடிட்டியும் அதிகம். எப்போது வேண்டுமானாலும் நீங்க உங்க பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
This is purely my opinion and not intended to suggest for or against any schemes. consider your current situation, financial goals and consult an advisor before investing
ரவி என்பவரின் தாத்தா 1990ம் ஆண்டு எம் ஆர் எஃப் நிறுவனத்தின் 20,000 ஷேர்களை வாங்கியிருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக முடக்குவாத்தில் முடங்கியிருந்த அவர் இப்போது கொஞ்சம் உடல் நலம் தேறியதும் இது குறித்து ரவியிடம் சொல்லி அந்த ஷேர் சர்ட்டிஃபிகேட்டை ரவிக்கு கொடுத்திருக்கிறார்.
2001 ஆண்டு 500 ரூபாய்க்கு எம் ஆர் எஃப் ஷேர் விற்றது. 1990 ஆண்டில் இவர் இதை 100 ரூபாய் அளவுக்கு வாங்கியிருப்பார் என நினைக்கிறேன்.. 27 ஆண்டுகளுக்கு முன் ரெண்டு லட்ச ருபாய் முதலீடு செய்து காத்திருந்ததின் பலன் இப்போ அதன் மதிப்பு 130 கோடி ரூபாய்.
கோமா வந்து வீட்டில் நினைவில்லாமல் இருந்தாலும் பெருகிக்கொண்டே போகும் நல்ல பங்குகளில் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம் அல்லது ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம் என்று கூறி 6% வட்டிக்கு ஃபிக்சட் டெபாசிட் போடலாம்.. சாய்ஸ் உங்க கையில்
எண்டோமெண்ட், மணி பேக் பாலிசி எல்லாம் நல்ல முதலீடுன்னு நம்புறவங்க அடுத்த போஸ்ட்டுக்கு தாவி விடுதல் நலம். இந்த பதிவு முழுக்க முழுக்க என்னோட பர்சனல் ஒப்பீனியன். இது யாருக்கும் அறிவுரை சொல்லவோ எந்த பாலிசியையும் வாங்கவோ விற்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் போட்ட கணக்கை சேமிக்க மட்டுமே…
மணிபேக் பாலிசி மட்டமான சாய்ஸ் என்பது என் நம்பிக்கை ஆனா இவ்வளவு மட்டமா இருக்கும்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்..
நான் கிறுக்கறதையெல்லாம் படிச்ச ஒரு நண்பர் ஆலோசனைன்னு வந்தார். நல்ல இன்சூரன்ஸ் ஏஜெண்டா பாருங்க சார், எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தெரியாதுன்னு சொன்னாலும் கேக்கல, மணிபேக்ல போடலாம்னு முடிவு பண்ணிட்டேன், 20 வருச ஸ்கீம்ல போடலாமா அல்லது 25 வருச ஸ்கீம்ல போடலாமான்னு மட்டும் சொல்லுங்க. ப்ரீமியம் வித்தியாசம் வருது. 20 வருசத்தில் 3 முறையும் 25 வருசத்தில் 4 முறையும் நடுவில் பணம் வரும், கடேசீல லம்ப்பாவும் வரும் – ரெண்டையும் எக்சலில் போட்டு எதில் அதிக பணம் கிடைக்கும்னு சொன்னா போதும்னு சொன்னார். சரி எக்சல் சொல்லப் போகுது அதை அவருக்கு காமிச்சிட்டா போதும்னு ஆரம்பிச்சேன்
நண்பரின் வயது35 இன்சூரன்ஸ் காலம் 20 வருசம் காப்பீட்டு அளவு : 10 லட்ச ரூபாய் ப்ளான் : மணி பேக் 20 வருச ப்ளான் நம்பர் 820 இதுக்கு ப்ரீமியம் பாத்தா மாசத்துக்கு 6749 ரூ வருது. (ரூ 6458 மற்றும் 291 ரூ வரி).
அதாவது ஆண்டுக்கு 77,496 மற்றும் வரிகளாம் 10 லச்ச ரூவா இன்சூரன்ஸுக்கு. சில பல பாலிசிகளைப் பாத்திருக்கேன். சம் அஸ்யூர்டுக்கு 7.7% ப்ரீமியம் இப்பத்தான் பாக்கறேன். நண்பரின் ஆண்டு வருமானம் ரூ 10 லட்சம். உங்க ஆண்டு வருமானம் அளவுக்கு இன்சூரன்ஸ் போதாதுன்னு சொன்னதுக்கு, இல்லீங்க நல்ல ரிட்டன்ஸ் இருக்கு. நீங்க 20-25 வருச ப்ளான்களில் ரிட்டர்ன் வித்தியாசம் மட்டும் பாருங்கன்னார். நமக்கென்ன போச்சுன்னு எக்சலில் கவனம் செலுத்தினேன்.
5 ஆண்டுகள் கழித்து 2 லட்ச ரூபாய் கிடைக்கும். நம்மாள் ஷேர் மார்க்கெட் எல்லாம் சூதாட்டம் என்பவர். அதனால் வங்கி வட்டி 6% வச்சி கணக்கு போட்டேன். அந்த 2 லட்சம் கூட்டு வட்டி முறையில் 15 ஆண்டுகள் கழித்து ரூ 479312 ஆகியிருக்கும்
10 ஆண்டுகளித்து இன்னோரு 2 லச்ச ரூபாய், அது பத்தாண்டுகள் 6% வட்டியில் வளர்ந்து 358170 ஆகியிருக்கும்.
15 ஆண்டுகள் கழித்து இன்னோரு 2 லச்ச ரூபாய், அது ஐந்தாண்டுகள் வளந்து 267645 ஆக இருக்கும். (இன்றைய நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் வங்கி வட்டி விகிதம் 6% எல்லாம் இருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் 6% போட்டு கணக்கு பண்ணேன்)
கடேசி பேமெண்ட் கொஞ்சம் ட்ரிக்கி. 4 லட்சம் கேரண்டீட் அதுக்கு மேல போனஸ், லாபத்தில் பங்கு எல்லாம் தருவாங்களாம். எவ்வளவுன்னு கேரன்டி இல்லை. சரி நாலுக்கு பதில் எட்டு லட்சம் தர்றாங்கன்னே வச்சிக்கோவோம்.
ஆக மொத்தம் 19,05,126 ரூ நண்பரிடம் 20 ஆண்டுகள் கழித்து இருக்கும்.
வாவ் 20 லட்ச ரூபாயா? நல்ல ரிட்டர்ன்பா அப்படியே 25 வருசம் பாத்துடுன்னு சொன்னவருக்கு ஒரு போன் கால் வந்தது. அவர் பேசிட்டு வர்றதுக்குள்ள எல் ஐ சியின் அமுல்ய ஜீவன் (நம்பர் 822) பாலிசியில் 35 வயசு, 20 ஆண்டு காலம், 10 லட்ச ரூபாய் காப்பீடுக்கு ப்ரீமியம் எவ்வளவுன்னு பாத்தேன். ஆண்டுக்கு 4150 + 747 வரி = 4897. அதாவது மாசத்துக்கு 408 ரூ. அதே பத்து லட்ச ரூபாய் காப்பீடு, அதே 20 வருச காலம் 6750 ரூ எங்க 408 ரூ எங்க.
அமுல்ய ஜீவன் எடுத்துட்டு, மிச்ச காசான 6340 ரூபாயை வங்கி ரெக்கரிங்க் அல்லது பாண்ட்கள் அல்லது ஈக்விட்டி ம்யூச்சுவல் ஃபண்ட் அல்லது சிட் ஃபண்ட் எதிலாவது முதலீடு செய்யலாம்.
மணி பேக் பாலிசி மூலம் வரக்கூடிய 19,05,126 ஐ விட அதிகம் பெற அந்த முதலீடு பெற வேண்டிய வட்டி அல்லது வளர்ச்சி எவ்வளவு தெரியுமா? வெறும் 2.2% மட்டுமே.
மாதாமாதம் முதலீடு ரூ 6340 காலம் 240 மாதங்கள் வட்டி 2.2% கடேசில கையில் 19,09,200 ரூ இருக்கும் அதாவது மணி பேக் பாலிசி கணக்கை விட நாலாயிரம் ரூ அதிகம் சம்பாதிக்க வெறும் 2.2% வட்டி கிடைத்தால் போதும். மணி பேக் பாலிசி கணக்குக்கு எடுத்த 6% வட்டி கிடைச்சால் 29,29339 ரூ இருக்கும்.
போன் பேசி விட்டு வந்த நண்பரிடம் இதையும் காமிச்சேன். பாவம் உனக்கு 2.5% வளர்ச்சி தரக்கூடிய முதலீடு எதுவும் தெரியாது இல்லையா? உனக்கு மணி பேக் தான் சரியா வரும், அடுத்து 25 வருச மணி பேக்கையும் பாத்துடலாம் என்றேன்.
ஸ்ரீராம், அமுல்ய ஜீவன்ல 20 லட்ச ரூபாய்க்கு எவ்வளவு ப்ரீமியம்னு பாரு, அப்படியே எப்பபாரு சொல்வியே அந்த இ எல் எஸ் எஸ் ம்யூச்சுவல் ஃபண்ட் பத்தியும் சொல்லுப்பா என்றார்
ஒருத்தரோட முதலீட்டுத் தொகுப்பு (Investment Portfolio) பத்தி பேசுற வாய்ப்பு வந்தது. அவர் தான் முதலீடு செய்யும் ஒரே ஒரு ஃபண்ட் பேர் சொன்னார். ஓரளவுக்கு நல்லா செயல் படக்கூடிய ஃபண்ட் ஆனா அது ஒரு மிட் கேப் ஃபண்ட். ஏங்க எல்லாத்தையும் ஈக்விட்டியிலேயே அதுவும் மிட்கேப்ல போடறீங்கன்னு கேட்டேன். நான் ரிஸ்க் எடுக்ககூடியவன் என்றார். இதுக்கு பதிலா அந்த பணத்துக்கு லாட்டரி சீட்டு வாங்கலாம்.
நம்மில் இப்படித்தான் பல பேர் அவர் சொன்னார், இவர் சொன்னார்னு ஏதோ ஒரு ஃபண்ட் செலக்ட் பண்ணி அதுல எல்லா பணத்தையும் போட்டுட்டு அப்புறம் மார்க்கெட் மேல குத்தம் சொல்றோம்.
முதலீடு, பங்குச் சந்தை எல்லாம் ராக்கட் சயன்ஸ் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டா யார் வேணா கத்துக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்ட் செலக்ட் பண்றதுக்கு வேல்யூரிசர்ச் ஆன்லைன், மணிகண்ட்ரோல் மாதிரி வெப்சைட்களில் ஒரு வாரம் ஒக்காந்தா கத்துக்கலாம்.
பால பாடம்னு ஒன்ணு இருக்கு அது மட்டும் எல்லாருக்கும் பொருந்தும். Don’t put all your eggs in one basket இது முதலீட்டுத் தொகுப்புக்குன்னே உருவானதுன்னு நினைக்கிறேன். முதலீடு செய்யும் நூறு சதவிகிதத்தில் உங்க வயசுக்கு ஈடான சதவீதம் பாண்ட்களில் இருக்கட்டும். மிச்சம் ஈக்விடிக்கு. வயசு முப்பதுன்னா 25-30 %பாண்ட் ஃபண்டிலும் 70-75% ஈக்விட்டியிலும் இருக்கட்டும்.
அதுக்கப்புறம் ஈக்விட்டி பங்கை குறைந்த பட்சமாக லார்ஜ் கேப், மிட்கேப் என்று இரண்டிலாவது போடுங்க. ஸ்பெசியாலிட்டி ஃபண்ட், இண்டர்நேசன்ல ஃபண்ட், செக்டார் ஃபண்ட் இவற்றுக்கெல்லாம் போகலேன்னா கூட பரவாயில்லை – லார்ஜ்கேப் மற்றும் மிட் அல்லது ஸ்மால் கேப் என்று ரெண்டு திட்டத்திலாவது முதலீடு செய்யுங்க.
மார்க்கெட் ஏறும் போது முழுசும் ஈக்விட்டியில் இருக்கும் போர்ட்ஃபோலியோ நல்லா இருக்கறா மாதிரி இருக்கும். மார்க்கெட் சரியும் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். சீட் பெல்ட் விபத்து நடக்காமல் இருக்க உதவாமல் இருக்கலாம், விபத்து நடக்கும் போது உயிர் போகாமல் இருக்க உதவும். டைவர்சிஃபிகேசன் பெரிய / சின்ன போர்ட்ஃபோலியோ எல்லாத்துக்கும் அவசியம்
ஒருத்தரோட முதலீட்டுத் தொகுப்பு (Investment Portfolio) பத்தி பேசுற வாய்ப்பு வந்தது. அவர் தான் முதலீடு செய்யும் ஒரே ஒரு ஃபண்ட் பேர் சொன்னார். ஓரளவுக்கு நல்லா செயல் படக்கூடிய ஃபண்ட் ஆனா அது ஒரு மிட் கேப் ஃபண்ட். ஏங்க எல்லாத்தையும் ஈக்விட்டியிலேயே அதுவும் மிட்கேப்ல போடறீங்கன்னு கேட்டேன். நான் ரிஸ்க் எடுக்ககூடியவன் என்றார். இதுக்கு பதிலா அந்த பணத்துக்கு லாட்டரி சீட்டு வாங்கலாம்.
நம்மில் இப்படித்தான் பல பேர் அவர் சொன்னார், இவர் சொன்னார்னு ஏதோ ஒரு ஃபண்ட் செலக்ட் பண்ணி அதுல எல்லா பணத்தையும் போட்டுட்டு அப்புறம் மார்க்கெட் மேல குத்தம் சொல்றோம்.
முதலீடு, பங்குச் சந்தை எல்லாம் ராக்கட் சயன்ஸ் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டா யார் வேணா கத்துக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்ட் செலக்ட் பண்றதுக்கு வேல்யூரிசர்ச் ஆன்லைன், மணிகண்ட்ரோல் மாதிரி வெப்சைட்களில் ஒரு வாரம் ஒக்காந்தா கத்துக்கலாம்.
பால பாடம்னு ஒன்ணு இருக்கு அது மட்டும் எல்லாருக்கும் பொருந்தும். Don’t put all your eggs in one basket இது முதலீட்டுத் தொகுப்புக்குன்னே உருவானதுன்னு நினைக்கிறேன். முதலீடு செய்யும் நூறு சதவிகிதத்தில் உங்க வயசுக்கு ஈடான சதவீதம் பாண்ட்களில் இருக்கட்டும். மிச்சம் ஈக்விடிக்கு. வயசு முப்பதுன்னா 25-30 %பாண்ட் ஃபண்டிலும் 70-75% ஈக்விட்டியிலும் இருக்கட்டும்.
அதுக்கப்புறம் ஈக்விட்டி பங்கை குறைந்த பட்சமாக லார்ஜ் கேப், மிட்கேப் என்று இரண்டிலாவது போடுங்க. ஸ்பெசியாலிட்டி ஃபண்ட், இண்டர்நேசன்ல ஃபண்ட், செக்டார் ஃபண்ட் இவற்றுக்கெல்லாம் போகலேன்னா கூட பரவாயில்லை – லார்ஜ்கேப் மற்றும் மிட் அல்லது ஸ்மால் கேப் என்று ரெண்டு திட்டத்திலாவது முதலீடு செய்யுங்க.
மார்க்கெட் ஏறும் போது முழுசும் ஈக்விட்டியில் இருக்கும் போர்ட்ஃபோலியோ நல்லா இருக்கறா மாதிரி இருக்கும். மார்க்கெட் சரியும் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். சீட் பெல்ட் விபத்து நடக்காமல் இருக்க உதவாமல் இருக்கலாம், விபத்து நடக்கும் போது உயிர் போகாமல் இருக்க உதவும். டைவர்சிஃபிகேசன் பெரிய / சின்ன போர்ட்ஃபோலியோ எல்லாத்துக்கும் அவசியம்
ஒருத்தரோட முதலீட்டுத் தொகுப்பு (Investment Portfolio) பத்தி பேசுற வாய்ப்பு வந்தது. அவர் தான் முதலீடு செய்யும் ஒரே ஒரு ஃபண்ட் பேர் சொன்னார். ஓரளவுக்கு நல்லா செயல் படக்கூடிய ஃபண்ட் ஆனா அது ஒரு மிட் கேப் ஃபண்ட். ஏங்க எல்லாத்தையும் ஈக்விட்டியிலேயே அதுவும் மிட்கேப்ல போடறீங்கன்னு கேட்டேன். நான் ரிஸ்க் எடுக்ககூடியவன் என்றார். இதுக்கு பதிலா அந்த பணத்துக்கு லாட்டரி சீட்டு வாங்கலாம்.
நம்மில் இப்படித்தான் பல பேர் அவர் சொன்னார், இவர் சொன்னார்னு ஏதோ ஒரு ஃபண்ட் செலக்ட் பண்ணி அதுல எல்லா பணத்தையும் போட்டுட்டு அப்புறம் மார்க்கெட் மேல குத்தம் சொல்றோம்.
பால பாடம்னு ஒன்ணு இருக்கு அது மட்டும் எல்லாருக்கும் பொருந்தும். Don’t put all your eggs in one basket இது முதலீட்டுத் தொகுப்புக்குன்னே உருவானதுன்னு நினைக்கிறேன். முதலீடு செய்யும் நூறு சதவிகிதத்தில் உங்க வயசுக்கு ஈடான சதவீதம் பாண்ட்களில் இருக்கட்டும். மிச்சம் ஈக்விடிக்கு. வயசு முப்பதுன்னா 25-30 %பாண்ட் ஃபண்டிலும் 70-75% ஈக்விட்டியிலும் இருக்கட்டும்.
முதலீடு, பங்குச் சந்தை எல்லாம் ராக்கெட் சயன்ஸ் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டா யார் வேணா கத்துக்கலாம். ம்யூச்சுவல் ஃபண்ட் செலக்ட் பண்றதுக்கு வேல்யூரிசர்ச் ஆன்லைன், மணிகண்ட்ரோல் மாதிரி வெப்சைட்களில் ஒரு வாரம் ஒக்காந்தா கத்துக்கலாம்.
அதுக்கப்புறம் ஈக்விட்டி பங்கை குறைந்த பட்சமாக லார்ஜ் கேப், மிட்கேப் என்று இரண்டிலாவது போடுங்க. ஸ்பெசியாலிட்டி ஃபண்ட், இண்டர்நேசன்ல ஃபண்ட், செக்டார் ஃபண்ட் இவற்றுக்கெல்லாம் போகலேன்னா கூட பரவாயில்லை – லார்ஜ்கேப் மற்றும் மிட் அல்லது ஸ்மால் கேப் என்று ரெண்டு திட்டத்திலாவது முதலீடு செய்யுங்க.
மார்க்கெட் ஏறும் போது முழுசும் ஈக்விட்டியில் இருக்கும் போர்ட்ஃபோலியோ நல்லா இருக்கறா மாதிரி இருக்கும். மார்க்கெட் சரியும் போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். சீட் பெல்ட் விபத்து நடக்காமல் இருக்க உதவாமல் இருக்கலாம், விபத்து நடக்கும் போது உயிர் போகாமல் இருக்க உதவும். டைவர்சிஃபிகேசன் பெரிய / சின்ன போர்ட்ஃபோலியோ எல்லாத்துக்கும் அவசியம்
பாதுகாப்பு பெட்டகம் குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்து பல கண்டனங்களையும் கமெண்ட்களையும் பாக்கறோம்
முத்தாய்ப்பா ஒருத்தர் சொன்னார் – அம்பானியின் கசின் தான் ஆர் பி ஐ கவர்னர், அவர் மோடியின் சொல் பேச்சு கேட்டு இப்படி மாத்திட்டார்னு.. எதால சிரிக்கறதுன்னு தெரியல. ஒரு விசயத்தைப் பத்தி பேசும் முன் அது குறித்து அடிப்படையை அறிவாவது இருத்தல் நலம்
பாதுகாப்புப் பெட்டகம், தமிழ்ல சொன்னா பேங்க் லாக்கர் – இது வங்கிகளால் வாடகைக்கு விடப்படுமிடம். அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்சில் ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதைப் போல வாங்கி ஒரு க்யூபிக் ஃபீட் இடத்தை உங்களுக்கு வாடகைக்கு விடுகிறது. வீட்டு ஓனர் வாடகைதாரர் இல்லீகல் காரியம் செய்ய அனுமதிக்க மாட்டார், அது போல வங்கிகள் லாக்கர் வாடகைகாரர் லாக்கரில் பணம், சட்ட விரோத பொருட்கள் போன்றவற்றை வைக்க அனுமதிக்காது, மத்தபடி லாக்கரில் நீங்க என்ன வைக்கறீங்க என்று வங்கி கேட்காது, நீங்களும் சொல்ல மாட்டீங்க, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை
வண்டி பார்க்கிங்கில் கூட நீங்க செலுத்தும் தொகை வண்டி நிறுத்த மட்டுமே அன்றி வண்டியின் பாதுகாப்புக்கு அல்ல, என்ன வண்டி நிக்க வைக்கறீங்க, அதன் தோராய மதிப்பு என்னனு தெரியும் போதே பார்க்கிங் லாட் ஓனர்கள் வண்டிக்கு பாதுகாப்போ காப்பீடோ (இன்சூரன்ஸ்) வழங்குவதில்லை. என்ன இருக்குன்னே தெரியாத லாக்கருக்கு வங்கி எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? ஒரு வேளை களவு போனாலோ அல்லது தீ, வெள்ளம் போன்ற பேரழிவில் சேதமானாலோ.. வாடகைதாரர் தான் ஒரு கோடிக்கு நகை வைத்திருந்தேன் என்று சொன்னால் வங்கி என்ன செய்யும்?
நீங்க வைக்கும் பொருள் என்ன, அதன் மதிப்பு என்னன்னு தெரிஞ்சாலாவது பொருட்களுக்கான ஜெனரல் இன்சூரன்ஸ் வங்கியால் வழங்க முடியும். பேச்சுக்கு அப்படி ஒரு வசதியை வங்கி வழங்கத் தொடங்கினால் – நீங்க வங்கி மேனேஜரிடம் வைக்கும் பொருள் அனைத்தையும் காட்டி அவற்றுக்கு அப்ரைசல் வாங்கி வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும், இன்சூரன்ஸுக்குன்ன்னு தனியா செலவும் ஆகும் -இதுக்கெல்லாம் நீங்க தயாரா?
லாக்கரில் வைக்கும் பொருளுக்கு பாதுகாப்பு உண்டு – நீங்க வைக்கும் பொருட்களை தகுதியான ஆட்களிடம் காட்டி அப்ரைசல் வாங்குங்க, அதை ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் காட்டி பொருட்களுக்கு காப்பீடு வாங்குங்க. இது லாக்கரில் வைக்கும் பொருட்களுக்கு மட்டுமல்ல நீங்க வீட்டில் வைத்திருக்கும் விலை மதிப்பு மிக்க பொருட்களுக்கும் பொருந்தும்.
இதுதான் உலக நடைமுறை. இந்தியாவிலும் இன்றும் என்றும் அப்படித்தான். இது நீங்க லாக்கர் வாங்கும் போது கையெழுத்து போடும் பேப்பரிலும் இருக்கும். ஆர் பி ஐ ஏன் இப்போது இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதுன்னு தெரியல ஆனா இது புதிதல்ல.. எப்பவும் இருக்கறதை இப்ப சொல்லியிருக்காங்க
மோடியை எல்லாத்துக்கும் திட்டறதை விட்டுட்டு போய் ஜெனரல் இன்சூரன்ஸ் வாங்குங்க
மத்திய அரசின் இன்னுமொரு நலத்திட்டம். இது இந்தியக் குடிமகன்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்குகிறது. மிகக் குறைந்த செலவில் குறைந்த அளவு ஆயுள் காப்பீடு
என்னளவில் இது அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் அதுக்கு மேலே இருப்பவர்களுக்கு உகந்ததல்ல. ஆனாலும் இதை நல்ல திட்டமாகக் கருதுகிறேன்
ஆயுள் காப்பீடின் அளவு வெறும் 2 லட்ச ரூபாய் மட்டும்தான். காப்பிட்டின் பாலபாடமாக ஆண்டு வருமானத்தின் 5 முதல் 20 மடங்கு வரை காப்பீடு எடுக்கச் சொல்வாங்க, எனவே மாசம் 50,000 ரூ சம்பாதிக்கும் ஒருவரின் குடும்பத்துக்கு இந்த காப்பீடு யானைப்பசிக்கு சோளப்பொரி. மேலும் காப்பீடு 55 வயதில் முடிந்து விடும், காப்பீடு அதிகம் தேவைப்படும் காலம் 55- 65 வயது வரை. இதுவோ 55ல முடிந்து விடும். அப்புறம் நான் ஏன் இதை நல்ல திட்டம் என்கிறேன்.
இதை வாங்கலாம் உங்களுக்காக அல்ல, உங்க வீட்டிலோ அலுவலகத்திலோ வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களுக்கு வாங்கித் தரலாம். செலவு ஆண்டுக்கு 330 ரூபாய் தான் (வரிகள் தனி). நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான செலவில் 2 லட்ச ரூபாய் காப்பீடு. வீட்டு வேலை செய்யும் பெண்மணி, டிரைவர், அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன், அலுவலக ப்யூன் போன்றோர் காப்பீட்டில் கவனம் செலுத்துவதில்லை. அவர்களில் ஒருவர் இறக்க நேரிட்டால் அக்குடும்பம் ரொம்பவே கஷ்டப் படுகிறது, அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கணிசமான தொகை, நமக்கோ ஆண்டுக்கு 330 ரூபாய் பெரிய பணமில்லை. உங்களுக்கு வேலை செய்பவரின் குடும்பத்துக்காக இதைச் செய்யலாம். சும்மாத் தர மனசில்லைன்னா தீபாவளி போனஸாக இதைத் தரலாம்.
இக்காப்பீட்டை எல் ஐ சி நிறுவனம் மூலமாகவும் வங்கிகளின் மூலமாகவும் பெறலாம்
வட்டி விகிதங்களைக் குறைத்து மக்களின் சேமிப்பு முழுவதையும் ஷேர் மார்க்கெட் பக்கம் திருப்பும் செயல் நல்லதா கெட்டதா என்பது மாபெரும் விவாதத்துக்கு உரியது.
ஆனால், இதனால் விளைந்த ஒரு நன்மை, நாம் வாங்கும் கடனுக்கும் வட்டி குறைகிறது. இப்போதைக்கு 30 ஆண்டுகளுக்கான வீட்டுக்கடனுக்கான வட்டி 8.5 % ஆக இருக்கிறது. இந்தியாவில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் குறைந்து கொண்டு வரும், இருந்தாலும் வங்கிகள் fixed rate of Interest வழங்காமல் Floating rate வழங்குவது நுகர்வோருக்கு லாபமே.
அரசியல், பொருளாதாரம், பொருளாதாரத்துக்குப் பின் இருக்கும் அரசியல் இதுக்குள்ள எல்லாம் போகாமல், ஹோம்லோன் வாங்கறவங்க என்ன செஞ்சா பலனளிக்கும்னு யோசிக்கலாம்
1. அதிமுக்கிய பாயிண்ட் live within your means – உங்க வருமானத்தில் இஎம் ஐ மூன்றில் ஒரு பங்கு தாண்டாமல் பாத்துக்கொள்ளவும்
2. இன்சூரன்ஸ் : அம்பது லச்ச ரூபாய்க்கு வீடு வாங்கறீங்கன்னு வைங்க, 40 லட்ச ரூபாய் வங்கி கடன் தரும். இதுக்கு இணையாக 40 லட்ச ருபாய்க்கு Term life insurance எடுப்பது இன்றியமையாதது. ஒரு வேளை நீங்க இறக்க நேரிட்டால், உங்க குடும்பத்துக்கு வீடு கிடைக்கும், நீங்க இல்லாமல் அவர்களால் தவணை கட்ட முடியாது, வீட்டை விற்கும் நிலை ஏற்படும் அமெரிக்காவில் இருப்போர் உங்க சம்பளத்துக்கு இணையா disability insurance உம் எடுங்க.. இது இந்தியாவில் இருக்கான்னு தெரியாது – அமெரிக்காவில் இருக்கு – விபத்து, நோய் போன்ற காரணங்களால் உங்களால் வேலைக்குப் போக முடியாவிட்டால் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுக்கு மாதா மாதம் பணம் தரும்.
3. additional payments : மேலே சொன்ன உதாரணத்தில் – வீட்டின் விலை 50 லட்சம், கடன் 40 லட்சம், காலம் 30 ஆண்டுகள், வட்டி விகிதம் 8.5 % – இதன்படி உங்க மாதாந்திரத் தவணை ரூ 30,756. 54 இதை 360 மாதங்கள் கட்டினால் வீடு உங்களுக்குச் சொந்தமாகும். கடனை முடிக்கும் போது நீங்க கட்டிய தொகை ரூ 1, 10, 72, 354 அதாவது வட்டி மட்டும் 70 லட்சத்துக்கும் மேல். மாதாந்திரத்தவணையை கட்டி விட்டு அதற்கு மேல் அதில் 10 % அதாவது மாதா மாதம் 3000 ரூ additional payment கட்டினால், இதே கடன் 21 ஆண்டுகள் 8 மாதங்களில் முடிந்து விடும். 70 லட்சத்து 72 ஆயிரத்துக்கு பதில் 47 லட்சத்து 44 ஆயிரம் மட்டுமே வட்டியாக செலுத்துவீர்கள். அதாவது மாதா மாதம் 3000 ரூ அதிகம் கட்டுவதன் மூலம் நீங்க சேமிக்கும் தொகை 23 லட்சத்துக்கும் அதிகம்
4. சேமிப்பு : நீங்க வாங்கும் கடனில் 0.1 % அதாவது 40 லட்சத்தின் 0.1% ரூ 4000 மாசா மாசம் சேமிக்கத் துவங்குங்க. அதை ஒரு நல்ல மியூச்சுவல் ஃப்ண்டில் ELSS / SIP முறையில் சேமிங்க மேலே சொன்ன 3000 ரூ கூடுதல் தொகை கட்டி வந்தால் கடன் 256 மாதங்களில் முடியும். அதே 256 மாதங்கள் மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால முதலீடு செய்து வந்தால் குறைந்தது 10% வளர்ச்சி இருக்கும். 256 மாத முடிவில் உங்களுக்கு கிடைப்பது ரூ 35, 36, 977, முதல் போக மிச்சம் ரூ 25,12, 955. இதே காலத்தில் நீங்க செலுத்திய வட்டி 47 லச்சம் அதில் 25 லட்சத்தை மாதம் 4000 ரூ சேமிப்பதன் மூலம் திரும்ப பெற முடியும். மார்க்கெட் நல்லா போனா 15% சாத்தியம் – அப்ப உங்களுக்கு வட்டி மட்டுமே ரூ 63,52,231 கிடைக்கும் – அதாவது நீங்க செலுத்திய வட்டியை விட 16 லட்சம் அதிகம்.
வீடு வாங்கப் போகும் முன் மாதா மாதம் உங்களால் இவற்றில் எதை எல்லாம் கவர் செய்ய முடியும் என்று பார்த்து விட்டு வாங்குதல் நலம்….
வங்கிகளின் வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொண்டே வரும் மத்திய அரசு ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கும் ஆறுதல் பரிசு. இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு வைப்பு நிதி வட்டியாக 8 முதல் 8.3% வரை வட்டி வழங்கப் படுகிறது (ஆண்டுக்கு ஒருமுறை வட்டி வாங்கினா 8.3%, மாதாமாதம் வேணும்னா 8%)
இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் முதலீடு செய்யலாம். மாதம் ஐயாயிரம் ரூபாய் வரை பென்சன் தரக்கூடிய நல்ல திட்டம்.
10 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு நிதி – தமிழ்ல சொன்னா ஃபிக்ஸ்ட் டெபாசிட்.
என் கருத்தில் திட்டத்தின் நல்லவை 1. நாட்டில் வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில் 8% உத்திரவாதம் நல்ல விசயம். இப்போதைக்கும் 7-7.5% இருக்கும் வட்டி இன்னும் சில ஆண்டுகளில் 5% அளவுக்குப் போய் விடும் 2. தற்போதைய நிலையில் 10 ஆண்டுகளுக்கு இந்த வட்டி விகிதம் என்பது லாபகரமான விசயம் 3. Annuity product களில் வயதை பொருத்து வட்டி விகிதம் இருக்கும் (The older you are, higher the interest rate will be) இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் 4. வைப்பு நிதியில் 75% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்
திட்டத்தின் அல்லவை
1. இத்திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மாதம் 10000 ரூபாய் என்பது சொற்பமான பணம். ஓய்வோதியக் காரர்களின் தேவையில் ஒரு சிறு பகுதியை மட்டுமே இது பூர்த்தி செய்யும்
2. பிற வைப்பு நிதிகளைப் போலவே இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு கிடையாது, இது என்னளவில் பெரிய குறை இல்லை. ஏன்னா 60 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் வரையிலும் 80 வயதுக்க்கு மேற்பட்டோர் 5 லட்சம் வரையில் வருமான வரி கட்டத் தேவையில்லை. இதற்கு மேலும் சம்பாதிப்போர் வரி கட்டுவது நியாயமே.
3. வெகு அறிதான காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக 10 ஆண்டுகளுக்கு முன் பணம் திரும்பப் பெற முடியாது
conclusion : ஓய்வூதிக்காரர்களின் முழுத் தேவையையும் பூர்த்தி செய்யாவிட்டாலும் மாதம் 10,000 ரூ வரை இதன் மூலம் பெற முடியும். என்னளவில் இது ஒரு நல்ல திட்டம்.