நண்பர்
ஒருத்தருக்கு இப்படி ஒரு இமெயிலை எல் ஐ சியின் ஏஜெண்ட் ஒருத்தர்
அனுப்பியிருக்கார். படிச்சதும் பகீர்னு இருந்தது, இப்படியெல்லாமா பொய் சொல்லி,
பித்தலாட்டம் பண்ணி பாலிசி விக்கணும் என்றிருந்தது.
மொதல்ல
இமெயிலைப் படிங்க
From: LIC <lic_csr@customerservice.org.in>
Date: 26-Jul-2018 5:48 PM
Subject: LIC NEW JEEVAN LAKSHYA FAMILY PROTECTION PLAN
To:
HI,
Warm Greetings from LIC Of India
We
are choosing few golden customers like you. Its regarding high returns with tax
savings, were entire family will be benefited.
The
plan name is JEEVAN LAKSHAYA which is purely a traditional plan which
Is not linked to any share market.
For example ;If
you are investing 1,20,000 P/A {Mode of premium : QUARTERLY, HALF YEARLY
, YEARLY } So you will be choosing a term of 18 years but you will be Paying only for 15 years, So your investment will be18,00,000, towards the policy,
And completion of the term your total returns will be 44,31,960 with complete Tax free under section 80(c) and 10(10) D .
Apart from your investment and returns you will be having 4
benefits:
1.
Your life will be insured for 18lakhs of any death.
2.
In case any thing happens to the policy holder in between the term,
immediately 18 lakhs will be given to their beloved nominee, and
every year nominee will get the amount of 1, 80,000 as
a pension till the maturity term, and also all the future premiums will be waved and paid by LIC
and finally the returns will be given their nominee.
3.
Completion of the term you can also convert the returns in to pension plan were
you will be receiving the pension amount of 34,163* every
month throughout your life time and after you the nominee also can continue
pension , In case of absence of the both the returns will be equally divided
among the children.
4.
By keeping this bond as supporting documents you can also avail for loans up to
80% of the estimated value of the property.
*Sir The plan name
itself its JEEVAN LAKSHYA (Lakshya means Goal)whatever the customer goal either
he is alive/absence the goal/Lakshya will be reached through this JEEVAN
LAKSHYA plan.
*But where as in this
plan in case of customer absence immediately 18 lacks of SUM ASSURED will be
given and 10% of sum assured that is 1,80,000/- will be given from customer
absence year to till maturity.And all the future premiums from customer absence
year to till maturity will be waved and paid by the LIC. Finally again the
nominee will get maturity benefit on 18th year last day.
Sir I mean to say this is very good savings cum protection plan.
Like these golden plans once in 5 years lic will lunch. Earlier we
have JEEVAN SREE, JEEVAN KOMAL, JEEVAN SHNEHA which has given very good
benefits and got Golden Peacock awards. Again now this Jeevan Lakshya plan is
one such plan with very good benefits. So we are giving awareness and helping
the people to reach their future Lakhya with our JEEVAN LAKSHYA plan.
Sum Insured :Rs 18,00,000/-
Total investment :Rs 18,00,000/-
Total Benefits :Rs 44,31,690/-
*Pension :Rs 34,163/- P.M till 100
years[Pension is optional]
If your planning to go with this plan you can revert me back
with your appointment details .
The documents that has to be keep ready.
1.) 2 passport size
photos.
2.) Age Proof
3.) Address Proof
4.) I.D Proof
5.) Educational
Certificates(10 + Higher education certificates)
6.) 3 month Salary pay
slip if your working otherwise 3 years IT Returns.
7.) cheque leaf on
favour of LIC of INDIA
With Regards,
Anjana
LIC of India.
இப்ப இதில் என்னென்ன
தவறுகள்னு பாப்போம்
- ஜீவன் லக்ஷயா 2015 இல்
அறிமுகம் செய்யப்பட்ட எல்லாருக்குமான பாலிசி, இது ஒன்றும் குறிப்பிட்டோருக்கு
மட்டுமான ஸ்பெசல் பாலிசி அல்ல
- இமெயில் கிடைக்கப்பெற்ற
நண்பருக்கு வயது 45. அவருக்கு 18 லட்ச ரூபாய், 15+3 ஆண்டுகள் ஜீவன் லக்ஷயா
பாலிசிக்கு ப்ரீமியம் ஆண்டுக்கு 1,29,000 அல்லது மாதம் 10,980 – இதில் சொல்வது போல
1.2 லட்சம் அல்ல
- இத்திட்டத்தில் முதலீடு செய்தால், முதிர்வடையும்
போது காப்பீட்டுத் தொகை (சம் அஸ்யூர்ட்), vested Simple Reversionary bonuses and
Final Additional bonus, if any வழங்கப்படும் என்றே எல் ஐ சி சொல்கிறது. இவ்வளவு
தொகை கிடைக்கும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியாது, இன்னும் சொல்லப் போனால்
இந்த ஏஜெண்ட் இப்படி உறுதி தருவது காப்பீட்டு விதிகளுக்கு முரணானது.
- சிம்பிள் ரிவிசினரி போனஸ் என்பது எல் ஐ சி ஒவ்வொரு ஆண்டும் தன் லாபத்தில் ஒரு பங்கை
பாலிசிதாரர்களுக்கு பிரித்து வழங்குவது. ஃபைனல் அடிசன் போனஸ் ஒரே ஒரு முறை
வழங்கப்படுவது. இன்று வழங்கும் போனஸ்
என்றுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. சென்ற ஆண்டின் போனஸே அடுத்த 18 ஆண்டுகளும்
நீடிக்கும் என்று நம்பினாலும், இத்திட்டம் முதிர்வடையும் போது எவ்வளவு கிடைக்கும்
தெரியுமா?
காப்பீட்டுத் தொகை ; 18 லட்சம்
சிம்பிள் போனஸ் – ஆயிரத்துக்கு 45 ரூபாய் * 18 ஆண்டுகள்= 14,58,000
ஃபைனல் போனஸ் 18 ஆண்டு பாலிசிக்கு ஆயிரத்துக்கு 30 ரூபாய் = 63,000
ரூ
ஆக மொத்தம் ரூ 33,21,000 எதிர்பார்க்கலாம்
- 44 லட்சமெல்லாம் கிடைக்க வாய்ப்பேயில்லை,
அப்படியே இருந்தாலும் அது உத்தரவாதத் தொகை கிடையாது, இப்படி 44 லட்சம் கிடைக்கும்
என்று அவர்களுடைய ஏஜெண்ட்கள் எழுதிக் கொடுப்பதை எல் ஐ சி எப்படி அனுமதிக்கிறது
என்று புரியவேயில்லை
- இந்த பாயிண்ட் தான் இந்த ஏஜெண்ட்டுக்கு பாலிசி
குறித்து எதுவுமே தெரியவில்லை என்று நிரூபிக்கிறது – இரண்டாவது பாயிண்ட்டில்
சொல்லியபடி பாலிசிதாரர் இறந்தால் உடனே நாமினிக்கு 18 லட்சம் கிடைக்காது. இறக்கும்
ஆண்டிலிருந்து பாலிசி நிறைவுரும் வரை ஆண்டு தோறும் 1.8 லட்சம் கிடைக்கும், பாலிசி
முதிர்வடையும் போதுதான் அதாவது 18வது ஆண்டின் முடிவில்தான் 18 லட்சம்
கிடைக்கும்.
- ஜீவன் லக்ஷயாவில் பென்சன் பெறும் திட்டமே
கிடையாது. இந்த ஏஜெண்ட்டோ திட்டம் முதிர்வடையும் போது பணத்தை பென்சனாக பெற்றுக்
கொள்ளும் வசதி இருப்பதாகச் சொல்கிறார் – இது முற்றிலும் தவறான தகவல், இவ்வசதி
ஜீவன் லக்ஷயாவில் இல்லவே இல்லை.
- ஏஜெண்ட் ஒரு நல்ல நிதி ஆலோசகராகச் செயல் பட்டு
ரெண்டு திட்டங்களை இணைத்து ஒன்றாக வழங்குகிறார் என்று வைத்தாலும் – வெறும் ஜீவன்
லக்ஷயாவின் பெயரை மட்டும் சொல்லி பென்சன் திட்டத்தின் பேரைச் சொல்லாமல் விடுவது தவறு
- ஏஜெண்ட் சொல்லியிருக்கும் முதிர்வுத் தொகையின்
9.2% ஆண்டு பென்சனாக பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். இன்றே அந்த
அளவுக்கு வட்டி தரும் பென்சன் திட்டம் ஏதுமில்லை, என்னும் 18 ஆண்டுகள் கழித்து
4-5% வட்டி தரும் பென்சன் திட்டம் இருந்தாலே பெரிய விசயம், 9% எல்லாம்
வாய்ப்பேயில்லை.
இது போன்று உண்மைக்குப் புறம்பானவற்றைச் சொல்லி ஏமாற்றும்
ஏஜெண்ட்டுகளை எல் ஐ சி என்ன செய்யப் போகிறது.
இப்போ ஜீவன் லக்ஷயா எப்படின்னு பாக்கலாம்
- காப்பீடு : மாசம் 10,000 ரூ ப்ரீமியம்
கட்டுறதுக்கு பயனரின் சம்பளம் 1 லட்சமாவது இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 12
லட்சம் உள்ளவரின் குடும்பத்துகு அவர் திடீரென இறந்தால் எல் ஐ சி தருவதோ 1.8 லட்சம்
(ஆண்டுக்கு) – எனவே இது காப்பீட்டுக்கு
கதைக்காகாது
- முதலீடு : ஏற்கெனவே சொன்ன கால்குலேசன் படி 15
ஆண்டுகளில் 16.5 லட்சம் செலுத்தி 18 ஆண்டுகள் முடிவில் கிடைக்கக் கூடியது 33
லட்சத்த்து சொச்சம், அதாவது 5% கூட்டு வட்டி – மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் கூட
வேண்டாம் வங்கி ரெக்க்ரிங் டெபாசிட்ல போட்டா கூட இதை விட பெட்டர் ரிட்டர்ன்
கிடைக்கும் என்று நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரியவேண்டும்??
இனிமே ஜீவன் லக்ஷயா
எனும் உலகமகா திட்டம் என்று “நைஜீரிய” இமெயில் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று
தெரியும் தானே?
எல் ஐ சியின் போனஸ்
குறித்து அறிய உதவிய தரவுகள் :
Final Addition
Bonus http://sumassured.in/final-additional-bonus-fab-for-lics-policies-for-year-2015-16/
Annual Bonus https://www.basunivesh.com/2017/08/24/lic-bonus-rates-for-2017-18/
http://insurancefunda.in/lic-bonus-rates-2017-2018/